இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Sunday, October 10, 2010

நேரத்தையாண்டிடு நேர்த்தியாக..

நீ பார்க்கும் நேமென்ன
நீ கடந்த நேரமென
நீ அடைந்த நேரமாய்
நீ தொலைத்த நேரங்களாய்


வாழ்வில் நீ கண்ட நிமிடங்கள்
வாழும்போதே மடிந்துவிட
வாழ்கிறேன் என்று மறந்து
வாழ்ந்தபின் துலைத்த நிமிடத்தை தேடுவாய்


வீண் என்ற விடயங்களில் 
வீரிய மாயைக்குள் நுழைந்து 
வீணடிக்கும் நேரங்களுக்காய்
வீர் என்று அழும் நேரமும் வரலாம்


அற்புதமான நேரங்களை 
அவசியமாய் பயன்படுத்திட 
அகிலத்தை ஆண்டவனாய் 
அத்தனையிலும் ஜெயித்திடலாம் 


வரையறுக்கப்பட்ட நிமிடங்களை 
வளமான திட்டமிடலுடன் 
வளமாக்கிடு -என்றும் 
வலம் வரும் நேரத்தை ஆண்டிடு 

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

6 comments:

தஞ்சை.வாசன் said...

நேரத்தின் மகிமை புரிந்துக்கொள்வோம். பயனுள்ள முறையில் செயல்படுத்துவோம்.

அருமை... நன்றி...

யாதவன் said...

நேரத்தை நேர்த்தியை கவிதையில் நன்றாக எழுதியுளீர்

சசிகுமார் said...

பயனுள்ள கவிதைகள் நண்பா வாழ்த்துக்கள்.

நேசமுடன் ஹாசிம் said...

@தஞ்சை.வாசன்

மிக்க நன்றி நண்பா

நேசமுடன் ஹாசிம் said...

@யாதவன்

மிக்க நன்றி நண்பா

நேசமுடன் ஹாசிம் said...

@சசிகுமார்

மிக்க நன்றி தோழரே

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...