இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Monday, October 25, 2010

ஏங்கவைத்த பொற்காலம்...


இளமையில் கல் என
இயற்றிய மொழி மறந்து 
இயல்புதான் வாழ்வென
இனித்ததுவே துடினம் 

படி என்று ஊரும் உரைக்க
பகட்டுக்காய் புத்தகத்துடன் 
படிமம் காட்டி நின்று 
பலரையும் ஏமாற்றினேன் 

கல்விக் கடலடைந்து 
கற்றிராத மோடனாய் 
கண்ட கண்ட சுகங்களுடன் 
கலந்திருந்து இழந்துவிட்டேன் 

முடிவு கண்ட சுகங்களெல்லாம் 
முனைந்து எனை படிப்பித்து 
முதுமையில் ஏங்கிட 
முழுமனதும் வலிக்கிறது 

அன்றிருந்த பொழுதுகளை 
அறிந்திருந்தும் வீணடித்து 
அவதியுறும் வாழ்வுடன் 
அங்கலாய்க்க வைக்கிறதே...


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

2 comments:

சசிகுமார் said...

beauty

யாதவன் said...

கவிதை நல்ல இருக்கு கலக்கிடிங்க

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...