இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Wednesday, September 28, 2011

காதல் கொலை....இதயத்தை ரணமாக்கி
காதலை உயிராக்கினேன்
வேடத்தில் தேவதையாகி
என்னிதயத்தை அழித்துவிட்டாய்


இறந்த என்னிதயம் கூட
உன்னிதய சாந்திக்காய்
காதலுலகில் கையேந்தி நிற்கிறது
நிர்க்கதியற்ற உன் நிலை போக்கிட 


உயிரோடு புதைப்பதுபோல் 
பிரித்தெடுத்த இதயத்திலும் 
உன்நினைவுகளின் அசைவுகள் 
இரத்தக் கண்ணீர் வடிக்கிறது 

என் கண்ணீரோடு காதலும் 
உன் காலடியில் தவமிருக்க 
உணர்வற்ற உன்னிதயம் 
காதல் கொலையாளி ஆனதேன் 

Tuesday, September 27, 2011

தீயிற்குள் தென்றல் நீ......

அண்டசராசரங்கள் அகமகிழ்ந்த
உன்நிழலின் தரிசனத்தில் 
அரியணை சுகம் அடைந்தும்
அகன்றுவிட்ட இன்பங்கள் தேடி

முட்கள் மீது விரிப்பிலுறங்கி 
சேற்றில் விழுந்த சிறு எறும்பாய்
கத்திமீது தடுமாறுவதாய் நாட்கள்
என்றும் தீயில் விழுந்த பட்டாம் பூச்சி....


ஏற்றிடாத வாழ்வோடு ஏறிவிட்ட விமானம்
எப்போது இறங்கிடுமென்ற ஏக்கம்
உன் நினைவுத் தீயிலிருந்து
மீளாத்துயரோடு மீட்டாத வீணையாய்

எரிகற்களாய் இரையானபோதும் 
உன்னாலொரு வசந்தம் நிஜமாகிறது
உனக்காகவே உலகமென்று
உள்ளமிசை பாடுகிறது

அத்தனையிலும் ஆறுத
சுகந்தம் தரும் தென்றாலாக நீ 
உன் மொழியில் உயிர்க்கிறது 
இறக்கின்ற என்னிதயம் 

Saturday, September 24, 2011

விடைபெறும் உன் கண்ணீர்


கண்மணி உன் கண்ணீரோடைக்கு 
அணைகட்டிடத் துணிந்து ஆங்காங்கே 
சகோதரன் வெருண்டெழுகிறான் 
இன்றே துடைத்திட ஏற்றம் கொள்கிறான் 


மாற்றான் பிச்சையில் 
கையேந்தும் நிலையறுத்து 
பகல்கொள்ளையில் சுகங்காண்பதை 
பரிகாசத்துடன் வெறுக்கிறான் 


ஆண்ணென்ற தன்மானத்துடன் 
ஆதிக்கம் அவனுக்காகிட 
பெண்ணாதிக்கம் வெறுத்து 
பெண்ணையாளத்துடிக்கிறான் 

Sunday, September 18, 2011

மதம் உனது ஆயுதமா?? மடிந்திடுவாய்தன்மதம் பெரிதென்றுணரும் மனிதா 
மாற்றுமத விழுமியங்களை 
மதிக்காதவரை - நீ 
மனிதனாகவே மதிக்கப்படமாட்டாய் 


உன்மதம் போதித்திராத 
அடாவெடித்தனம் செய்து 
இன்னொருவரின் புனிதஸ்தலத்தை 
சுக்குநூறாக்கி மதங்களோடு மனங்களையும் 
குறிவைத்ததில் சாதித்ததென்ன??


மதக்காவலனும் பொதுக் காவலனும் 
உன்துணைவர துணிந்து 
புத்திகெட்ட மாக்களாய் நடந்ததைக் கண்டு 
ஊமை விழிகளுடன் உள்ளங்கள் உருகிறது 


Thursday, September 15, 2011

அன்றோடு இன்றுமுருங்கையிலை மூவரும் பறித்து 
ஆரவாரத்துடன் ஒவ்வொரு இலையாந்து 
அம்மாவுக்குத் தெரியாமல் 
குர்ணல் அரிசி பிடுங்கி 
வேப்பமரத்தடியில் மறைத்த கூடாரத்தினுள் 
சகோதரங்களென்று மறந்து 
அப்பா அம்மாவென்றழைத்து 
மகனிடம் காசு கொடு என்று 
செல்லமாய்பணித்து 
மிளகாய் இரண்டு வெங்காயம் ஒன்றென 
திருடலில் ஆக்கிவைத்து 
சீவிய சிரட்டையில் 
சிறிதுசிறுதாய் ஆறப்போட்ட 
குஞ்சுச் சோறுதிண்று 
குடித்த தண்ணீரும் ரசமென்று கூறி 
கும்மாளமடித்திட கூட்டாய்க் கதைபேசி 
பக்கத்து வீட்டுடன் 
பக்குவமாய் சம்மந்தம் கலந்திட 
சகோதரி வீடடைந்து திருமணப்பேச்சு 
வெட்கப்பட்ட பெண் பார்த்து 
மாப்பிள்ளை கேலிசெய்து 
கிச்சு கிச்சு மூட்டிய தோழிகளென 
சின்னஞ்சிறுசிச் சில்மிசங்கள் 
நாம் ஆடிக்களித்த அந்த நாட்கள் 
நினைக்க நினைக்க தித்திக்கிறதே 
இன்றய குழந்தை அறிந்திடாத 
மகிழ்விது காலத்தின் கட்டாயம் 
மம்மி டாடி என்றழைத்து 
கிரிக்கட் மட்டையுடன் 
வெயிலில் காய்ந்து 
வீட்டையடைந்தால் லெப்பில் புதைந்து 
வீடியோ கேம் வில்லங்க விளையாட்டென
வெற்று உலகத்துடன் 
வெறுமனே கழியுங்காலமாகினும் 
தேடல்களுடன் சுதந்திரமென 
கற்றலுக்கு வழிகாட்டல் 
காலத்துக்கேற்ற மாற்றம் 
கருத்துள்ள குழந்தைகளாய் 
இக்காலத்து செல்வங்கள் 
சொல்லும்போதே ருசிக்கிறது 
விபரிதங்களற்ற சுதந்திர நாளை 
சுகமாய் மலர்ந்திடட்டும் 
அன்றோடும் இன்றோடும் 
அசைபோட முடிகிறது 

Tuesday, September 13, 2011

சேனை என்றொரு சோலை (200000 பதிவுகள்)வியக்கும் விந்தையாக
வீர்கொண்டெழுந்த
சேனைத் தமிழ் உலாவினை
வியந்துதான் பார்க்கிறேன்


தூய நட்பிற்கு அடிமையாகி
தோழனின் கரம்பற்றினேன்
தோழமைகள் துணைவர
வென்றுநிற்கிறான் தோழன்


முயற்சியின் பிரதிபலனாய்
நட்பின் வெற்றியாய்
முதலிடமடைந்த சேனையினை
மகிழ்வாய்ப் பார்க்கிறேன்


சேனையின் நிறுவனராய் மாறி
இளைக்கப்பட்ட துரோகங்களுக்கு
நெற்றியடியாய் என்னாலும் முடியுமென்று
நிருபித்த தோழன் வழி
ஆச்சரியமெனக்கு

Monday, September 12, 2011

வாழும்போதே சாதித்திடுவேட்கையுண்டு வாழ்வில்
வீர் கொண்டெழு மனிதா
வாழும் போது நீ சாதித்திடாத
சரித்திரங்களெதுவும்
சாவுகளோடு நிலைத்திடுவதில்லை


தலைமைகள் எமக்கு வழிகாட்டியாகி
அத்தனையிலும் சாதித்தவர்களாக
அவர்களின் சாகசங்களை
அடுக்கடுக்காய் அசைபோடுகிறோமே


அதிகாலை எழுந்தது முதல்
அந்திமாலை உறங்கும் வரை
உன் பயணத்தின் அசைவுகளோடு
உன்நிலையின் உசிதமதை
கேள்வி கணக்குடன் வகுத்துப்பார்

Saturday, September 10, 2011

உணராதவரை ஊழல் அழிந்திடாது........ஊழலற்ற உழைப்போடு
ஊதியம் பெற்றுநட 
ஊராரை ஏய்த்துழைத்து 
உன்னுலை பொங்கிடாதே...


உன்னொருத்தனின் ஆசையில் 
தேசத்தின் தலையெழுத்தென்று 
நேசங்கொண்டோரின் வசையில் 
எத்தனைகாலம் அழுதிடும் எம்தேசம்


தனிமனித ஒழுக்கத்தோடு 
பிணைந்துவிட்ட ஊழலுக்காய் 
அரசுநோக்கிய பிடியாணை 
பிறப்பிப்பதில் நியயமுண்டோ 

Friday, September 9, 2011

நீவருவாயென.....

இறுக்கம் தொலைந்த நள்ளிரவில்
மலர்ந்த உன் மற்றொரு பிறந்தநாளிலும்
நானற்ற தனிமையில் தூக்கமின்றி
நீதேடிய அணைப்பினை தரமறுத்த பாவியாய்
தொலைவிலிருந்து வாழ்த்துகிறேன்


தொட்டுணர்ந்த காதலும்
பட்டுணர்ந்த காதலும்
எட்டிநின்று ஏளனம் செய்கிறது
ஏவாளின் காதலாய் சேரத்துடிக்கும்
தினங்களுக்காக காதலுமங்கு
பிரார்த்தனை செய்கிறது


நிவர்த்திக்கப்பட்ட நியாயங்களும் 
நிர்கதியான நிலமைகளும்
நிம்மதி தேடியங்கு 
நிழலாய்த் தொடர்கிறது 


காதலில் உயிராய் 
காலத்திற்குத் துணையாய் 
பாசத்திற்கு நிகராய் 
அன்பின் உறைவிடமாய் 
உலக ஜனனத்தில் எனைச் சேர்ந்தாய் 


உன்னோடுள்ள வாழ்க்கையில் 
உயிர்பெற்ற உணர்வுகளோடு 
உடனிருப்பது நீயென்றுனர்ந்து 
உலகவலம் வருகிறேன் 
உயிருள்ளவரை நீவருவாயென......

Tuesday, September 6, 2011

அஸ்தமனம் நட்போடாகட்டும்நட்பெனும் உலகில் 
நன்மைகள் தேடி நானும் 
அலைந்த நாட்களதிகம் 
அடைந்த போதெல்லாம் மகிழ்ந்தேன் 


நட்பினைப் பேணிட 
நச்சரித்த உறவுகளைக்கூட 
துச்சமெனக் கொண்டு 
துணிந்திருந்தேன் தோழமைக்காக 


உயிரிலும் மேலான நட்பினால் 
உளம் மகிழ்ந்து உயிர்த்திருக்கிறேன் 
நட்போடுள்ள நளினங்களை 
நட்பின் வெகுமதியாக்கினேன் 


Related Posts Plugin for WordPress, Blogger...