இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Tuesday, September 13, 2011

சேனை என்றொரு சோலை (200000 பதிவுகள்)வியக்கும் விந்தையாக
வீர்கொண்டெழுந்த
சேனைத் தமிழ் உலாவினை
வியந்துதான் பார்க்கிறேன்


தூய நட்பிற்கு அடிமையாகி
தோழனின் கரம்பற்றினேன்
தோழமைகள் துணைவர
வென்றுநிற்கிறான் தோழன்


முயற்சியின் பிரதிபலனாய்
நட்பின் வெற்றியாய்
முதலிடமடைந்த சேனையினை
மகிழ்வாய்ப் பார்க்கிறேன்


சேனையின் நிறுவனராய் மாறி
இளைக்கப்பட்ட துரோகங்களுக்கு
நெற்றியடியாய் என்னாலும் முடியுமென்று
நிருபித்த தோழன் வழி
ஆச்சரியமெனக்குபரந்துவிரிந்த ஆழ்கடலிணயத்தில்
நட்பை இலக்காக்கி உணர்ந்த உறவுகளின்
கைகொடுத்தலோடு மகிழ்ந்து
அரவணைத்து அசத்தியதில்
வெற்றிநடை சேனைக்கு


இருலட்சம் ஒருவருடத்தினுள் அடைந்து
வியக்கும் பதிவுலகுக்கு அதிர்ச்சியூட்டியதில்
பெருமை சேனையின் தோழர்களுக்கு 


நட்பென்பது வற்புறுத்தலில்லாதது 
உண்மை நட்பு விலைமதிப்பற்றதென
நிர்ப்பந்திக்கப்படாத இணைவுகளோடு 
சேனையென்றும் மகிழ்ந்திருக்கிறது 


சேனையின் சிறப்பறிந்த சிற்பிகள் 
நாழுந்தோறும் செதுக்கி செப்பனிட்டு 
சேனையினை ஒரு சோலையாக 
நிறுவியதில் மகிழ்கிறது சேனை 


இத்தனைக்கும் கைகொடுத்து 
இணைந்துநிற்கும் இணையவிருக்கும் 
அத்தனை நண்பர்களுக்கும் 
மனம் மகிழ்ந்த நன்றிகளை 
தெரிவிக்கிறது சேனை 


நட்புக்கென்றோரிடம் சேனை 
விதிவிலக்கில்லாத இடம் சேனை 
கலகலப்புக்கான இடம் சேனை 
மதிப்பிற்குரிய இடம் சேனை 
என்றும் மகிழ்ந்திட சேனை 
அனைத்துரிமைக்கும் சேனை 
அகமகிழ்ந்து வாழ்த்துவோம் 
அதனொடென்றும் தொடர்வோம் 
சேனைத் தமிழ் உலா

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...