முருங்கையிலை மூவரும் பறித்து
ஆரவாரத்துடன் ஒவ்வொரு இலையாந்து
அம்மாவுக்குத் தெரியாமல்
குர்ணல் அரிசி பிடுங்கி
வேப்பமரத்தடியில் மறைத்த கூடாரத்தினுள்
சகோதரங்களென்று மறந்து
அப்பா அம்மாவென்றழைத்து
மகனிடம் காசு கொடு என்று
செல்லமாய்பணித்து
மிளகாய் இரண்டு வெங்காயம் ஒன்றென
திருடலில் ஆக்கிவைத்து
சீவிய சிரட்டையில்
சிறிதுசிறுதாய் ஆறப்போட்ட
குஞ்சுச் சோறுதிண்று
குடித்த தண்ணீரும் ரசமென்று கூறி
கும்மாளமடித்திட கூட்டாய்க் கதைபேசி
பக்கத்து வீட்டுடன்
பக்குவமாய் சம்மந்தம் கலந்திட
சகோதரி வீடடைந்து திருமணப்பேச்சு
வெட்கப்பட்ட பெண் பார்த்து
மாப்பிள்ளை கேலிசெய்து
கிச்சு கிச்சு மூட்டிய தோழிகளென
சின்னஞ்சிறுசிச் சில்மிசங்கள்
நாம் ஆடிக்களித்த அந்த நாட்கள்
நினைக்க நினைக்க தித்திக்கிறதே
இன்றய குழந்தை அறிந்திடாத
மகிழ்விது காலத்தின் கட்டாயம்
மம்மி டாடி என்றழைத்து
கிரிக்கட் மட்டையுடன்
வெயிலில் காய்ந்து
வீட்டையடைந்தால் லெப்பில் புதைந்து
வீடியோ கேம் வில்லங்க விளையாட்டென
வெற்று உலகத்துடன்
வெறுமனே கழியுங்காலமாகினும்
தேடல்களுடன் சுதந்திரமென
கற்றலுக்கு வழிகாட்டல்
காலத்துக்கேற்ற மாற்றம்
கருத்துள்ள குழந்தைகளாய்
இக்காலத்து செல்வங்கள்
சொல்லும்போதே ருசிக்கிறது
விபரிதங்களற்ற சுதந்திர நாளை
சுகமாய் மலர்ந்திடட்டும்
அன்றோடும் இன்றோடும்
அசைபோட முடிகிறது

1 comments:
அருமை பாராட்டுக்கள் நண்பரே
Post a Comment