இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Saturday, September 24, 2011

விடைபெறும் உன் கண்ணீர்


கண்மணி உன் கண்ணீரோடைக்கு 
அணைகட்டிடத் துணிந்து ஆங்காங்கே 
சகோதரன் வெருண்டெழுகிறான் 
இன்றே துடைத்திட ஏற்றம் கொள்கிறான் 


மாற்றான் பிச்சையில் 
கையேந்தும் நிலையறுத்து 
பகல்கொள்ளையில் சுகங்காண்பதை 
பரிகாசத்துடன் வெறுக்கிறான் 


ஆண்ணென்ற தன்மானத்துடன் 
ஆதிக்கம் அவனுக்காகிட 
பெண்ணாதிக்கம் வெறுத்து 
பெண்ணையாளத்துடிக்கிறான் மலர்போன்ற பெண்ணானவளை 
அவன் உழைப்பிலேந்தி 
வாழ்நாளுக்கு வசந்தம் சேர்த்திட 
வாகையவன் செய்திட்டான் 


சீதனக்கொடுமையில் 
சீதையெம் கண்கள் 
சிந்தும் கண்ணீர்களை 
சீர்செய்திடத் துணிந்துவிட்டான் 


வாலிபத்தேவையால் இசைந்து 
மார்க்கத்திற்கு மாற்றமாக 
மகிழத்துடிக்கும் மனங்களை 
எச்சரித்திடவும் புறப்பட்டுவிட்டான் வேதவிழுமியங்கள் மறந்துதிடாது 
வீணர் புத்தியிலிசைந்திடாது 
உன்னால் செல்வமடைந்டையாத 
செல்வந்தனாக உத்தேசிக்கிறான் 
சிந்தையுள்ள சித்திரமாய்
சீரிய முகம்மது வழி பிறந்த
இஸ்லாமிவன் மூச்சாக்கியதில் 
முழுமையான இஸ்லாமினாய் 
உன் கண்ணீருக்கும் விடைகொடுத்திடுவான் 

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

1 comments:

காந்தி பனங்கூர் said...

அருமையான கவிதை...

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...