ஊழலற்ற உழைப்போடு
ஊதியம் பெற்றுநட
ஊராரை ஏய்த்துழைத்து
உன்னுலை பொங்கிடாதே...
உன்னொருத்தனின் ஆசையில்
தேசத்தின் தலையெழுத்தென்று
நேசங்கொண்டோரின் வசையில்
எத்தனைகாலம் அழுதிடும் எம்தேசம்
தனிமனித ஒழுக்கத்தோடு
பிணைந்துவிட்ட ஊழலுக்காய்
அரசுநோக்கிய பிடியாணை
பிறப்பிப்பதில் நியயமுண்டோ
சட்டங்கள் வகுத்தாலென்ன
சாசனங்கள் ஏற்றினாலென்ன
அந்தரங்கமாய்க் கைநீண்டும்
புத்திசாலித் திருடன் உணர்ந்து
திருந்த வேண்டாமா
காகிதமாகிய பணத்திற்காய்
தன்மானத்தினை விற்று
சுயநலத்துடன் சுகங்கள் தேடி
நியாயங்கள் சாகடிக்கப்படுகிறது
தன்னைத்தானுணரும் மனசாட்சியுடன்
திருந்திடாத மானிடனிருக்கும்வரை
எத்தனை லோக்பால் வந்தாலும்
ஊழல்தான் அழிந்திடுமா??

7 comments:
//
தனிமனித ஒழுக்கத்தோடு
பிணைந்துவிட்ட ஊழலுக்காய்
அரசுநோக்கிய பிடியாணை
பிறப்பிப்பதில் நியயமுண்டோ
//
நல்ல கேள்வி .. ஆனால் பதில் ?
சமுக அக்கறை உள்ள கவிதை
//
காகிதமாகிய பணத்திற்காய்
தன்மானத்தினை விற்று
சுயநலத்துடன் சுகங்கள் தேடி
நியாயங்கள் சாகடிக்கப்படுகிறது
//
உண்மை நண்பா .. காசே தான் கடவுளடா
//தன்னைத்தானுணரும் மனசாட்சியுடன்
திருந்திடாத மானிடனிருக்கும்வரை
எத்தனை லோக்பால் வந்தாலும்
ஊழல்தான் அழிந்திடுமா??//
சரியா சொன்னீங்க சார். அவர்களாக திருந்தினால்தான் ஊழலை ஒழிக்க முடியும்.
கவிதை நடை அருமை நண்பா.
அருமை அருமை ஊழலுக்கு எதிரான தங்கள்
உணர்ச்சி பொங்கும் கவிதைக்கு வாழ்த்துக்கள்
சகோ .முடிந்தால் என் தளத்திற்கும் வந்துபோங்கள் .
மிக்க நன்றி பகிர்வுக்கு ...........
என் ஓட்டுக்கள் மூன்றும் இட்டுவிட்டேன் வாழ்த்துக்கள் .
நல்ல கவிதை.அன்னா ஹ்சாரே வரிசையில் சேர ஆசையா?
நேரம் இருக்குபோது எனது தளத்திற்கும் வாருங்களேன்.
Post a Comment