தன்மதம் பெரிதென்றுணரும் மனிதா
மாற்றுமத விழுமியங்களை
மதிக்காதவரை - நீ
மனிதனாகவே மதிக்கப்படமாட்டாய்
உன்மதம் போதித்திராத
அடாவெடித்தனம் செய்து
இன்னொருவரின் புனிதஸ்தலத்தை
சுக்குநூறாக்கி மதங்களோடு மனங்களையும்
குறிவைத்ததில் சாதித்ததென்ன??
மதக்காவலனும் பொதுக் காவலனும்
உன்துணைவர துணிந்து
புத்திகெட்ட மாக்களாய் நடந்ததைக் கண்டு
ஊமை விழிகளுடன் உள்ளங்கள் உருகிறது
மக்களின் பிரதிநிதியாகிய- நீ
மதத்தினுள் கைவைக்கிறாய்
மதத்தின் கட்டளைகளுக்கு
உன் புத்தியில் தீர்ப்பளிக்கிறாய்
மதங்களின் கடமைகளான கட்டளைகளுக்கு
கட்டுப்பட்ட மனிதங்களோடு
காலாகாலம் நடந்தவை மறந்து
இன்றுமட்டுமெதற்கு உன் வேண்டாத போதனை
உன்னால் மூட்டப்படுகிறது தீ
அனல்களாய் மனங்களில்
கொழுந்துவிட்டெரிகின்ற தீயானது
பற்றிக்கொள்ளாதென்று நினைத்திடாதே
அதைத் தாங்கும் நிலை உனக்கில்லை
வாய்மூடித் தாழ்ந்திருக்கும்
நாதியற்ற அரசியல் தலைமைகள்
வேதம் மறந்து அனியாயத்திற்கு
மொனிகளாய் துணைநிற்கின்றனர்
வேண்டிய சமாதானம்
வருடிகளின் கைகளினால்
பறிபோகும் அனியாயங்கள்
நியாயவாதிகளற்ற அவலங்கள்
ஒன்றுவிட்டு ஒன்றில்
எதிர்வுகூறும் யுத்தங்களை
ஆரம்பிக்கத்துடிக்கும் பேரினவாதத்திற்கு
இன்றய ஆயுதம் மதங்களாகிறது
மதத்தின் உரிமையாளன்
இறைவனென்று மறந்து
அவனுக்கே சவால் விடுகின்றனர்
இவர்களையும் காத்திடு இறைவா.....

2 comments:
//மதத்தின் உரிமையாளன்
இறைவனென்று மறந்து
அவனுக்கே சவால் விடுகின்றனர்
இவர்களையும் காத்திடு இறைவா..... //அருமையான வரிகள் அன்பரே வாழ்த்துக்கள்
அன்பு சகோதரா, இந்த வலைபதிவு முயற்சி மிகவும் அருமை, தமிழர்கள் தமிழில் பிண்ணூட்டமிட, தமிழ் எழுதியை நிறுவி வாசகர்களுக்கு உதவலாமே, அதிக விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும் நன்றி
Post a Comment