இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Monday, March 28, 2011

கண்டதும்.... காதல்

உனைக் கண்டதில் கொண்ட காதலால்
தினமும் காணச்சொய்து 
கலங்கச்செய்கிறாயே காதலில் 
கிறங்கச்செய்கிறாயே...

உன்விம்பம் உணர்த்திய அழகினை 
உன் நடைகள் தளர்த்துகின்றதே
உன் வதனத்தில் மிளிர்ந்த உண்மைகள் 
வாழ்வுக்குப் பொய்களாகின்றதே

Saturday, March 26, 2011

நேர்மை அரசியல்

அரசியல் தேரங்கு 
அச்சாணி களண்டுகிடக்கிறது 
தேர்தல் காலத்தோடுமட்டும் 
அரசியல் சாசனங்கள் 

நேர்மை எமக்குண்டு 
நலங்கள் காத்திடுவோம் 
நாளுந்தோறும் உமக்காக 
எம்வாழ்க்கை சமர்ப்பணமென 
இலவச வாக்குறுதிகள் மட்டு்ம் 

ஒவ்வொரு வாக்குகளுக்கும் 
இவ்வளவுதான் விலையென 
அற்ப பெருள்கொடுத்து 
அடகுபிடிக்கும் தரகர்கள் 

Thursday, March 24, 2011

நீயா..... நானா......

நீயென்று நானென்று 
நாம் செய்யும் கலகத்தில் 
பிஞ்சு உள்ளமதில் 
நஞ்சு விதைகிறது 

காண்பவைகளை கற்கத்துணியும் 
கன்னி உள்ளமதில் 
கருத்தாளம் உன்தவறில் 
கலங்கிறது நீயறியாமல்..

Tuesday, March 22, 2011

ஒளியில்லா உலகில்......


பார்க்கத்தோன்றிய போதும் 
பார்க்கமுடியாத துரதிஸ்டசாலியாய் 
தொடர்ந்த கருவறை இருளோடு 
போராடுகிறது கண்கள் 

பல்லாயிரம் கண்களாய் 
உணர்தலோடு பார்வைகள் 
இருள் மட்டுமே உலகமானதில் 
வேற்றுமைகள் தெரிவதில்லை 

Sunday, March 20, 2011

வீரத்தாய்க்கு துரோகமா....??

உன் அன்பிற்கு உரித்தானவள் 
விரகதாபத்துடன் வீற்றிருக்கிறாள் 
விடியாத இரவுகளுடனும் 
கழியாத பொழுதுகளுடனும் 
தினம் தினம் போர்தொடுக்கிறாள் 


விட்டுப்பிரிந்த வினாடிதொட்டு 
வீண்பழி சுமத்துவோரும் 
வீணர் தொல்லைகளுமாய் 
எப்பொழுதும் வீரத்தாய் வேடம் 


காமத்தின் எல்லைதொட்டு 
களியாட்டம் தினம் தந்து 
கட்டில்சுகம் தந்த 
கண்ணியவான் நீயென்று 
கற்போடு காத்திருக்கிறாள் 

Saturday, March 19, 2011

பாதை தடுமாறிய பயணம்.....

கற்றுத் தேறுதலை 
எனது இலக்காக்கி 
கடிகாரம் காணாத 
முழு முயற்சியோடு 
மூழ்கியிருந்தேன்.....


இருண்ட வானில் 
மிளிர்ந்த மின்னலாய் 
எனைவீழ்த்திட முதல்படியாய் 
உன்தரிசன வினாடிகள் 

Wednesday, March 16, 2011

(காதல்)யார்மீது குற்றஞ்சொல்வது...???

உன்னிதயம் என்கைமாறியபோது 
என்னிதயம் தொலைந்து போனது 
என்னிதயம் பிறர்கைமாறியபோது 
உனக்கிதயம் இல்லையென்றானது 


இதயங்களின் பரிமாற்றத்தோடு 
இணைபிரியாக் காதலராய் 
நாம் வலம் வந்த நாளிகளைத் தேடுகிறேன் 
என்தனிமை பல சொய்திசொல்கிறது 



காதலில் கன்னியாய் மலர்ந்து 
தடம்பதித்திருந்த என்க்கு 
தடம்புரண்ட வாழ்வளித்த 
காதலையா குற்றஞ்சொல்வது 

Tuesday, March 15, 2011

அனர்த்தம் உணர்த்துமா ???

குறுகியது வாழ்க்கை
 மனிதா உணர்வாயா? - என
கால ஓட்டத்தில் 
மீண்டுமோர் அனர்த்தமாய் சுனாமி


வல்லோனின் ஆட்சியில் 
நழுவிய மனிதர்களை 
திரும்பிடச்செய்வதற்காய் 
மனித வல்லமை கடந்த
சக்தியின் சீற்றமிது...

Saturday, March 12, 2011

கல்விக்காய் சேவைசெய்....

கல்லென்று சொல்லாதார் 
கலியுகம் கண்டதில்லை 
கல்வியின் நிலைகளோடுணர்நது - நீயும் 
கற்றிடு திறனுடனே...


ஆயுளற்ற கல்வியோடு 
முடிவுறும் ஆயுளுண்டு 
முடிந்தவரை கற்றுக்கொடு 
உம்நாமம் நிலைத்திருக்கும்


பகுத்தறிந்திடும் மாணவனாய் 
வரம்புகளற்ற தேடலுடன் 
தூயதுவை தேர்ந்தெடு...
துணிவுடன் வென்றிடலாம் 

Monday, March 7, 2011

பெண்.....பெண்ணாகிறது

பெண்ணென்ற போதையில் 
மயங்கிடாத மனங்களில்லை 
பெண்மையில் வீழ்ந்திடாத
வறட்டுக் கர்வங்களுமில்லை....


துறவறம் பூண்டாலும் 
தீண்டிடும் ஈர்ப்புண்டு 
தூரதேசம் சென்றாலும் 
உனைச் சுற்றிடும் வசியமுண்டு 


காதலுக்குக் கருவும் பெண் 
ஆசைக்குத் திருப்தியும் பெண் 
அதிகாரத்தின் முடிவும் பெண் 
அச்சங்கொண்டடங்குவதும் பெண் 

பொன்னான வாக்குகள் எம்வாள்கள்

பிரதேச வாதம் பேசும்
பிரயோசனமான தேர்தலிது 
எம் நலங்காத்திட 
பிறர் பார்வைக்களித்துடும் தேர்தலிது 


எம் ஆட்சி எமக்காகிட 
ஒற்றுமையினை பறைசாற்றிட 
எல்லோரும் கைகோர்த்து 
ஒன்றுசேர வேண்டிய தேர்தலிது 


வென்றிருந்த கடந்த காலத்தினை 
வெற்றியோடு தொடர்ந்திட 
வேற்றுமை களைந்து விட்டு 
ஒன்றுபடும் தருணமிது 

Saturday, March 5, 2011

உன்னையும் நீ தேடு....


மனங்களில்லாத மனிதமெதற்கு 
மனிதங்களில்லாத வாழ்வெதற்கு 
வாழ்கையில்லாத தேடலெதற்கு 
தேடலில்லாத ஜீவனெதற்கு 


மனதில் வேதனையுடன் 
பணந்தான் வாழ்க்கையென்று 
பணம் மட்டும் தேடியலைந்து 
ஈற்றில் பணத்துடன் மடிந்திடுவதா ?


உன்னை உருக்குலைத்து 
உருவாக்கிய உடமைகளும் 
உன் குதூகலம் மறந்து 
தேடிவைத்த உரிமங்களும் 
உனைப்பார்த்துக் கேலிசெய்யுமே..

Wednesday, March 2, 2011

ஆட்டம்.....சூதாட்டம்

ஓட்டங்களோடுள்ள ஆட்டம் 
தன்மானத்திற்கான போராட்டம்
என்றும் பார்வையாளர் கூட்டம் 
நிறைகின்ற அரங்கமோ வட்டம் 


திறமைக்கு வழிதிறந்த 
தாயகம் காத்திருக்க 
ஆட்டத்தினை நிர்ணயித்து 
வைக்கிறாயே பணயமுன்தாயை 

Tuesday, March 1, 2011

களிப்போடு களையெடு .....சகோ..மலிக்காவுக்காக.

சிந்தனைக்குள் சிக்கி 
வார்த்தைகளுக்குள் நீந்தி
உணர்வுகளுக்கு உயிர்கொடுத்திட 
உருவாக்கினாய் வரிகள் 


உம்முள்ளம் நிறைந்தவர் 
உயிராய் தொடர்ந்து 
மதிக்கப்பட்ட உம்முணர்வுகளுக்கு 
பேசும் மொழிகொடுத்தார் 


சுமந்திருந்தாய் சுமையாய் நெஞ்சில்
சிரமேந்திட சகாக்கள் கூட்டம் 
சிற்பிகளின் செதுக்கல்களோடு
உன் ஜீரணத்திற்காய் மலர்ந்தது
”உணர்வுகளின் ஓசை ஒலி





Related Posts Plugin for WordPress, Blogger...