இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Sunday, March 20, 2011

வீரத்தாய்க்கு துரோகமா....??

உன் அன்பிற்கு உரித்தானவள் 
விரகதாபத்துடன் வீற்றிருக்கிறாள் 
விடியாத இரவுகளுடனும் 
கழியாத பொழுதுகளுடனும் 
தினம் தினம் போர்தொடுக்கிறாள் 


விட்டுப்பிரிந்த வினாடிதொட்டு 
வீண்பழி சுமத்துவோரும் 
வீணர் தொல்லைகளுமாய் 
எப்பொழுதும் வீரத்தாய் வேடம் 


காமத்தின் எல்லைதொட்டு 
களியாட்டம் தினம் தந்து 
கட்டில்சுகம் தந்த 
கண்ணியவான் நீயென்று 
கற்போடு காத்திருக்கிறாள் 


எதிர்மறையான உன்நிகழ்வில் 
எள்ளிநகையாடல் மறந்து 
வேண்டாத உறவுகள் தேடி
வீண்வம்பில் தினம் நொந்து 
காலச்சுவடுகளுக்குச் 
சந்தர்ப்பமேன் தருகிறாய் 


இன்றைய தவறுகளுக்காய் 
உலகம் கண்டிராத மருந்துகள் தேடி
ஆளாகிடும் அவஸ்த்தையினை 
நீபெறும் இன்பங்கள் - இன்று 
நிச்சயம் உணர்ததிடாது 


தோழனே உமக்கும் 
துல்லியமான அறிவுண்டு 
துஸ்பிரயோகம் உன்துணைக்கும் 
துரோகம் உன்காதலுக்குமாய் 
செய்வதனை - உணர்வதெப்போ.......???


குறிப்பு: கண்டேன் சில நிகழ்வுகளை அதனால் விழைந்தது இவ்வரிகள் யாரதும் மனதினை புண்படுத்துவதற்காக அல்ல 

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

7 comments:

Lakshmi said...

நல்ல அர்த்தமுள்ள கவிதைக்கு நன்றி.

PC-PARK said...

நல்ல கவிதை,தொடருங்கள்

தமிழ்த்தோட்டம் said...

ஒவ்வொரு வரிகளும் ரொம்ப அருமையா இருக்கு

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in

தமிழ்வாசி - பிரகாஷ் said...

நல்ல கவிதை பகிர்வு...


எனது வலைபூவில் இன்று: வலைச்சரம் ஆசிரியர் சீனா சிறப்புப் பேட்டி - இரண்டு

மஞ்சுபாஷிணி said...

உண்மையே......
நாமுண்டு நம் வேலையுண்டு என்றிருந்தால் எத்தனையோ நலம்....
நல்லப்பெயர் கிடைப்பது அரிது, நல்லது செய்துவிட்டு கெட்ட பெயர் வாங்கும் நிலை

அருமையான வரிகளுக்கு அன்பு பாராட்டுக்கள் ஹாசிம்....

கலை said...

அறிவுரை வழங்கும் அரிய கவிதைகள் படைப்பதில் வல்லவரான உஙக்ள் அழகிய படைப்புக்கு நன்றியும் பாராட்டுக்களும் ஹாசிம்..!

உதயசுதா said...

சாட்டை அடி வார்த்தைகள் இவை ஹாசிம்.நிலை இல்லாத எதிர்காலத்துக்காக சம்பாதிக்க நிகழ்கால சந்தோசங்களை இழந்து நிற்கும் அனைவருக்கும் உங்கள் கவிதை சமர்ப்பணம்.
கணவன் வெளி நாட்டில் இருக்கும்போது நாட்டில் இருக்கும் மனைவி படும்,அனுபவிக்கும் வேதனைகளும்,கேட்கும் சொல் அம்புகளும் மிக கொடுமை ஆனவை ஹாசிம்

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...