இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Monday, March 7, 2011

பெண்.....பெண்ணாகிறது

பெண்ணென்ற போதையில் 
மயங்கிடாத மனங்களில்லை 
பெண்மையில் வீழ்ந்திடாத
வறட்டுக் கர்வங்களுமில்லை....


துறவறம் பூண்டாலும் 
தீண்டிடும் ஈர்ப்புண்டு 
தூரதேசம் சென்றாலும் 
உனைச் சுற்றிடும் வசியமுண்டு 


காதலுக்குக் கருவும் பெண் 
ஆசைக்குத் திருப்தியும் பெண் 
அதிகாரத்தின் முடிவும் பெண் 
அச்சங்கொண்டடங்குவதும் பெண் 


கமகமக்கும் மல்லிகையாய் 
காய்த்த மரக்கிழையாய் 
வீட்டின் குற்றுவிளக்காய் 
காலமெல்லாம் தொடர்பவளும் பெண் 


அம்மா என்று தொடர்ந்து 
அன்பே என்றாகி 
மகளே என்று மலர்ந்து 
வாழ்வின் பரிமாணங்களும் பெண் 


பெண்ணால் உருவான உலகில் 
பெண்போற்றிட வழிசெய்து 
துஸ்பிரயோகம் நினைத்திடாத/(செய்திடாத)
உலகொன்றை உருவாக்குவோம் 
அனைத்து தோழர்களுக்கும் மகளீர் தின நல்வாழ்த்துகள் 

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

1 comments:

அன்புடன் மலிக்கா said...

//துறவறம் பூண்டாலும்
தீண்டிடும் ஈர்ப்புண்டு
தூரதேசம் சென்றாலும் - உனைத்
துரத்திச் சுற்றிடும் வசியமுண்டு//

சிறுமாற்றம் சகோ. தவறென்றால் பொருந்திக்கொளவும்..


கவிதை வரிகள் மிகவும் அருமை சகோ.
வாழ்த்துக்கள்.
பெண்ணானவள் அனைத்துமானமள்..

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...