இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Saturday, March 26, 2011

நேர்மை அரசியல்

அரசியல் தேரங்கு 
அச்சாணி களண்டுகிடக்கிறது 
தேர்தல் காலத்தோடுமட்டும் 
அரசியல் சாசனங்கள் 

நேர்மை எமக்குண்டு 
நலங்கள் காத்திடுவோம் 
நாளுந்தோறும் உமக்காக 
எம்வாழ்க்கை சமர்ப்பணமென 
இலவச வாக்குறுதிகள் மட்டு்ம் 

ஒவ்வொரு வாக்குகளுக்கும் 
இவ்வளவுதான் விலையென 
அற்ப பெருள்கொடுத்து 
அடகுபிடிக்கும் தரகர்கள் 

ஏமாந்த கோமாளிகளாய் 
கவர்ச்சிப் பொம்மைகளுக்கு 
எதிர்காலத்தை சூனியமாக்கி 
விலைபோகும் அரசியல் பாமரர்கள் 

நடிகர் கூட்டங்களின் 
நாடக அரங்கேற்றங்கள் 
அரசியலிலும் கதை வசனங்களால்
கற்பனைகளாகும் மக்களின் எதிர்பார்ப்புகள்  

எல்லேரும் அவர்களாகிட 
எவர்தான் நேர்மையாளன்? எனும் கேள்வியோடு 
அமைதியிலும் அர்த்தமற்று 
அவதியுறும் சமூகங்கள் 

நேர்மை அரசியலொன்றுக்காய் 
சிந்தித்திடாத இளைஞர்கூட்டங்கள் 
ரசிகர் மன்றங்களோடு 
நடைப்பிண மனிதங்கள் 

சுயநலமற்ற சமத்துவத்துடன் 
சுத்தமான சுதந்திரக்காற்றாய் 
எதிர்கால இளசுகளுக்கு 
வேண்டுமின்று அரசியலில் நேர்மை....

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

3 comments:

மஞ்சுபாஷிணி said...

ஒரு நெருப்பு சாட்டை எடுத்து அதை சுழற்றி சுழற்றி வரிகளாய் இங்கே கவிதை படித்தது போல நெருப்பு பொறி பறக்கிறது..... முகமூடிகள் கிழிக்கிறது.... இலவசம் கொடுத்து நாட்டை தன் வசமாக்க நினைக்கும் பிணம் தின்னி கூட்டங்களுக்கு நச் சுத்தி அடி தான் ஒவ்வொரு வரியும்.....

காமராஜர் படம் போட்டு பாடம் எடுத்தது போதும்
இனியாவது கர்மவீரரை போன்று நேர்மையை காண விழைகிறது நாடும்.....

ஹாசிமின் நச் கவிதைகள் இதோ அரசியலை சாடி சாடி ஓயவில்லை இன்னும்.......

அரசியல்வாதிகளே வெட்கி தலைகுனிந்து போகும்படி வார்த்தை கோர்வை அருமை அற்புதம் ஹாசிம்..... அமைதிப்புயலாய் கிளம்பி அட்டகாச வரிகளில் அரசியல்வாதியை சுருட்டி வீசும் அருமையான கவிதை தந்தமைக்கு அன்பு வாழ்த்துக்கள் ஹாசிம்...

முரளிராஜா said...

நடக்கும் அவலங்களை படம் பிடித்த கவிதை நண்பா
எனது பாராட்டுக்கள்

வ.வனிதா said...

ரசித்த வரிகள் :
நேர்மை எமக்குண்டு
நலங்கள் காத்திடுவோம்
நாளுந்தோறும் உமக்காக
எம்வாழ்க்கை சமர்ப்பணமென
இலவச வாக்குறுதிகள் மட்டு்ம்

அருமை ! உண்மை ! நாட்டிற்குள் நல்லவர்களின் சாயல் பூசிய மனிதர்கள் அதிகம் ! அருமை !

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...