இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Monday, March 7, 2011

பொன்னான வாக்குகள் எம்வாள்கள்

பிரதேச வாதம் பேசும்
பிரயோசனமான தேர்தலிது 
எம் நலங்காத்திட 
பிறர் பார்வைக்களித்துடும் தேர்தலிது 


எம் ஆட்சி எமக்காகிட 
ஒற்றுமையினை பறைசாற்றிட 
எல்லோரும் கைகோர்த்து 
ஒன்றுசேர வேண்டிய தேர்தலிது 


வென்றிருந்த கடந்த காலத்தினை 
வெற்றியோடு தொடர்ந்திட 
வேற்றுமை களைந்து விட்டு 
ஒன்றுபடும் தருணமிது 


நல்லதோர் தவிசாளனை 
அடையாளங் கண்டிருந்தோம் 
பறர் நலம் அவர்பார்வை 
எமக்காக கொண்டிருந்தோம் 


இவர் பயணம் தொடர்ந்து 
இனியதோர் எதிர்காலத்தினை 
பிரதேசத்தின் இலட்சியத்தோடு 
அமைத்திட வழிசெய்வோம் 


பொன்னான வாக்குகள் எம்வாள்கள் 
எம்எதிரியாய் எம்சகாக்கள் 
எம்சமூக எழுச்சிக்காய் 
களையெடுத்திட வாக்கிடுவோம் 


எம்பாசறையில் வளர்ந்த 
முதல் இலக்க அன்சீலை 
முதன்மையாளராய் வென்றுநிற்க 
மும்மூரமாய் வாக்கிடுவோம் 

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...