இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Tuesday, March 1, 2011

களிப்போடு களையெடு .....சகோ..மலிக்காவுக்காக.

சிந்தனைக்குள் சிக்கி 
வார்த்தைகளுக்குள் நீந்தி
உணர்வுகளுக்கு உயிர்கொடுத்திட 
உருவாக்கினாய் வரிகள் 


உம்முள்ளம் நிறைந்தவர் 
உயிராய் தொடர்ந்து 
மதிக்கப்பட்ட உம்முணர்வுகளுக்கு 
பேசும் மொழிகொடுத்தார் 


சுமந்திருந்தாய் சுமையாய் நெஞ்சில்
சிரமேந்திட சகாக்கள் கூட்டம் 
சிற்பிகளின் செதுக்கல்களோடு
உன் ஜீரணத்திற்காய் மலர்ந்தது
”உணர்வுகளின் ஓசை ஒலி


கல்விமான்களின் புடைசூழலில்
கருத்தொலியில் நெகிழ்ந்து 
கவிமகள் ஈண்ற தாய்மையின் 
பெருமிதமும் நீயடைந்தாய் 


உணர்வின் வெகுமானமாய் 
கிடைத்திட்ட வெகுமதிகளை
மீண்டுமுரங்களாக்கிடு 
சமூகச் சுமைகளுக்காய்....


வல்லவன் துணையுண்டு 
துணைவனின் மனமுண்டு 
சொல்லெனும் ஆயுதத்துடன் 
வென்றுநில்லென்றும்....


உம்மெழுச்சி கண்டு
என்னுள் எழுந்த உணர்விது 
தேசங்கடந்தும் பாசம் 
வென்றிட்ட களிப்பிது......

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

4 comments:

அன்புடன் மலிக்கா said...

அன்புள்ள சகோதரர் அவர்களுக்கு.
படித்ததும் மிகவும் நெகிழ்ந்து மகிழ்ந்தேன்.

கண்காணாத உறவுகளின் அன்பில் திழைக்கிறேன்
இறைவா எண்ணிலடங்கா உயிர்களைபடைத்து அதில் இப்படியும் உறவுகளை சேர்க்க வல்லமைப்படைத்தவனே உனக்கு என் கோடானகோடி நன்றிகள்..

மிக்க நன்றி சகோதரர் ஹாசீம் அவர்களே..

Riyas said...

சகோ மலிக்காவுக்கு வாழ்த்துக்கள்.. உங்களுக்கும் நன்றிகள்

Earn Money Online without any Investment said...

வாழ்த்துக்கள்..

நேசமுடன் ஹாசிம் said...

@அன்புடன் மலிக்கா

மிக்க நன்றி சகோதரி

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...