இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Tuesday, March 15, 2011

அனர்த்தம் உணர்த்துமா ???

குறுகியது வாழ்க்கை
 மனிதா உணர்வாயா? - என
கால ஓட்டத்தில் 
மீண்டுமோர் அனர்த்தமாய் சுனாமி


வல்லோனின் ஆட்சியில் 
நழுவிய மனிதர்களை 
திரும்பிடச்செய்வதற்காய் 
மனித வல்லமை கடந்த
சக்தியின் சீற்றமிது...


ஆசைகள் பேராசைகளாகி 
மனிதங்கள் மிருகங்களாகி 
சகோதரன் என்றுமறந்து 
சாதாரணமாய் கொலைசெய்யும் 
மனிதம் உணரவில்லை 


சுயனலக்காரணாய்...
அட்டூழிய அரசியலோடு 
ஆட்சிபீடத்திற்காய் மட்டும் 
மனிதவதைகள் செய்யும் 
அதிகார அரசுகள் உணரவில்லை 


அதிகரித்த கொடுமைகளோடு 
தன்னை மறந்து 
தற்பெருமைக்காய் அலையும் 
மனிதன் மாறுமட்டும் 
ஆங்காங்கே அனர்த்தங்களாய் 
உணர்த்துவது மட்டும் நிச்சயம்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

1 comments:

nidurali said...

எதிர்பார்ப்பற்ற நட்புகளை நாளும் பொழுதும் நாடுகிறேன்...அருமை
உங்கள் நட்பு எனக்கு தேவை

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...