அக்கிரக்காரர்களின் அராஜகத்தைக்
காணச் சகிப்பதில்லை மனம்
விக்கித்த எம் இதயங்களிலிருந்து
கண்ணீரும் வர மறுக்கிறது
உயிர்கள் மதிப்பற்றதாகி
வீதிகளெங்கும் சிதறடிக்கப்படுகிறது
அப்பாவிக் குழந்தைகளைக் கொன்று
இரத்தம் குடிக்கிறான் இஸரேலியச் சாத்தான்
வளர்த்துவிட்ட அமெரிக்காவும்
வேடிக்கை பார்க்கும் அரபுலகமும்
வேதனைப்படுவதாய் தெரியவில்லை
இறைவனின் துணைநாடி
ஏழைகளங்கு இருகரமேந்துகின்றனர்
வாடகைக்காய் வதிவிடம் நாடியவன்
உடமைகள் என்னுடையதென்று
உரிமையாளனை வீதியில் நிறுத்திவிட்டு
நிரந்தரக் குடிபுகுந்த துரோகிகளின் ஆட்சி
நற்குணம் படைத்த வள்ளல்கள்
இறைவனுக்காய் ஈந்துதவிவிட்டு
அவனிடமே பாதுகாப்பும் தேடிநிற்கின்றனர்
வல்லோன் போதுமானவன்
கொல்பனும் கொல்லப்படுபவனும்
காரணம் அறியாத குற்றவாளிகளாய் மாறி
இறுதிநாள் நெருங்கிவிட்டதென
அறிகுறி அறிவிக்கின்றனர்.....
இரத்தம் குடிக்கும் சாத்தானின் சாம்ராஜ்யங்களே
நீங்கள் இன்று தேடும் அற்ப நிலங்கள்
உங்களையும் ஒருநாள் முழுங்கிக்கொள்ளும்
உங்களது எலும்புகள் சின்னாபின்னமாகும் வரை
அதன் கோரப்பிடியிலிருந்து தப்பிக்க முடியாது
பயந்துகொள்ளுங்கள் பரிதவிப்பீர்கள்
வாக்களித்த இறைவன் மிகப் பெரியவன்

1 comments:
தங்களின் ஆதங்கமும் கோபமும் புரிகிறது...
சரியாகச் சொன்னீர்கள்...
Post a Comment