சுகமானது காதெலென்றும்
ரணமானது ஏக்கங்களென்றும்
வலுவானது உறவுகளென்றும்
உள்ளக்கிடக்கைகளான உணர்வுகளுக்கு
உருவம் கொடுக்கிறதென் கவிதைகள்
தினமும் மொழிந்திட நினைக்கும் (கவிதை)
பேச்சை நிறுத்து என்றதினால்
பேசத்துடிக்கும் வார்த்தைகளின்
போராட்டங்களால் என்னுள்ளம்
போர்க்களமாகித் தவிக்கறதெடி
உன் மூச்சை நிறுத்து என்று
சொல்லியிருக்கலாம் என்னிடம்
உனக்காக உடனே என்சுவாசம்
நின்றிருக்கும் நின்றஇடத்தில்
உன்மீது நான் கொண்ட
காதலுக்குநிகர் என் கவிதையெடி
கவிதையைப் பிரித்தெடுத்து
காதலை கொலைசெய்யச்சொல்கிறாய்
நீ மௌனமாகிப் போனதினங்கள்
நடைப்பிணமான ரணங்களானது
உன்மீது கொண்ட காதல்மட்டும்
இமயம் தொட்டுவிட்டது
உன் அழைப்பு மணிக்காக
காத்திருக்கும் நான் நேரத்தைவிட
வேகமாக செல்போனைப்பார்க்கிறேன்
உன்னிடம் சமிக்ஞை கிடைக்குமென்று
கானல் நீர்களான கருத்துகளோடு
சலனப்படுத்தும் நிஜங்களை அகற்றி
காதலோடும் கவிதையோடும்
சங்கமமாகிடு என்னுயிரே.....
முன்பொருநாள் எழுதிய இக்கவிதை (26/10/2011) இன்று என்கண்ணில் பட்டது இன்றய இப்பிரசுரம் பொருத்தமற்றதாகினும் கவிதைமீதான என்காதல் வலுவானது.
2 comments:
என்னங்க... இப்படி அசத்திட்டீங்க... அருமை... ரசித்தேன்... வாழ்த்துக்கள்...
அசத்தலான அழைப்பு
நிச்சயம் கவிதையின் திறம் அறிந்தவர்களாயின்
சங்கமமாகிவிடுவர்
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
Post a Comment