இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Saturday, November 24, 2012

மனங்களின் ஏக்கம்....


கிடைத்ததோடு வாழ்ந்து
பிறருக்கும் நற்கொடையளித்து
மகிழ்ந்தானன்று மனிதன்
இல்லாதவற்றுக்குக்கெல்லாம்
ஆசைகொண்டு இல்லாதவனிடமே
கொள்ளையடிக்கிறானின்று

பணந்தான் வாழ்வென்று
பணத்துக்காக எதையும்
இழக்கத்துணிந்து இழிவுறும்
இயல்புகொண்ட மானிடர்கள்

ஆட்சிசெய்யும் பேராசையுடன்
யார் எக்கேடு கெட்டாலும்
என்னலம் என்னோக்கமென்று
கொன்று குவிக்கும் அசுரர்கள்

வாழ்வளிக்கப்படாத அனாதைகள்
வாழ்விழந்த விதவைகளென
அடிப்படைத் தேவைகளுக்காய் - இன்று
கண்ணீர்வடிக்கிறது உயிர்கள்
சுதந்திரக் காற்றைத்தேடி
சுற்றுச் சூழலை சுமைகளாய்க் கொண்டு
இன்னல்களுக்கு அடிமைகளாகி
அவதியுறும் அப்பாவிகள்

இரத்தக் கறைகளின் நடுவே
உயிர்களைத் தேடும் உயிர்களும்
மனசாட்சியை புதைத்துவிட்டு
கட்டளைக்குள் பணிந்துவிட்ட மனிதர்கள்

ஆயிரமாயிரம் சமகாலத்து
நிகள்வுகளைக் கண்டு கலங்கிநின்று
சுபீட்சமான எதிர்காலத்திற்காய்
இன்று ஏங்கிநிற்கிறது மனங்கள் 

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

5 comments:

Ramani said...

சுபீட்சமான எதிர்காலத்திற்காய்
இன்று ஏங்கிநிற்கிறது மனங்கள் //


மிக அருமையாகச் சொன்னீர்கள்
மனம் கவர்ந்த கவிதை
தொடர வாழ்த்துக்கள்

திண்டுக்கல் தனபாலன் said...

ஒவ்வொரு வரியும் உண்மை வரிகள் நண்பரே...

வாழ்த்துக்கள்...

புரட்சித் தமிழன் said...

//சுபீட்சமான எதிர்காலத்திற்காய்
இன்று ஏங்கிநிற்கிறது மனங்கள் //

சுபீட்சம் எதுவென்று தெறியாமலே.


உண்மையை உரைத்திருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்

முனைவர்.இரா.குணசீலன் said...

மனசாட்சியை புதைத்துவிட்டு
கட்டளைக்குள் பணிந்துவிட்ட மனிதர்கள்


மறுக்கமுடியாத உண்மை.

முனைவர்.இரா.குணசீலன் said...

வலைப்பக்க வடிவமைப்பு நேர்த்தியாக உள்ளது.

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...