சர்மிளா செய்யத் என்ற எழுத்தாளரின் கருத்தில் தத்தளித்திருக்கின்ற எம் சமுகத்தவர்களின் மனங்களுக்கு ஆறுதலை இறைவன் அளித்திடட்டும் உண்மையில் சர்மிளா செய்யத்தின் எழுத்து பற்றியும் அவரது சில சமுக அக்கறை பற்றியும் மிகவும் மகிழ்ந்திருந்த வேளை (BBC ல் சர்மிளாவின் செவ்வி) இப்படியான ஒரு செய்தி அவர் மூலமாக வெளியிடப்பட்டிருப்பதுதான் வருத்தத்தினை அளிக்கிறது இதற்கு சார்பாகவும் சிலர் (உதாரணத்திற்கு) கருத்தெழுதியும் வருகிறார்கள். இவர்களுடைய பார்வையில் முஸ்லிம் சமுகத்தவர்களின் கருத்தில் பிழை இருப்பதாக காண்கிறார்கள் இதனை பலர் தெழிவு படுத்தியும் புரிந்து கொண்டதாக தெரியவில்லை
உண்மையில் இந்த கோபத்திற்கான எதார்தமான காரணம் என்ன என்று ஆராயும் போது ஒரு பௌத்த மதத்தைச் சார்ந்த ஒரு அமைச்சரின்(“விபச்சார்த்தை சட்டரீதியாக்க வேண்டும் அதன் மூலமாக சுற்றுலாத்துறையின அபிவிருத்தி செய்யலாம்”) என்ற இந்த கருத்தை சொன்ன போதே இலங்கையின் நிலை எந்த அளவுக்கு செல்கிறது என்று சிந்திக்கின்ற பாமரன் கூட “காசுக்காக கூட்டிக் குடுக்கத்துணிகிறானே” என்று வாய்விட்டுச் சொல்லும் நிலைக்கு இட்டுச்சென்ற கருத்தினை ஆதரித்து இஸ்லாமிய மார்கம் தெரிந்த அதில் வாழ்கின்ற ஒரு பெண்மணியால் இதனை ஆதரித்து பேசமுடிகிறது என்றால் அவரது நிலை என்ன என்ற கேளவிதான் அனைவரையும் நிலை குலையச்செய்தது என்பது நிதர்சனமான உண்மை
உண்மையில் சமுக அக்கறை இவருக்கிருந்தால் பாலியல் தொழிலாளர்களுக்கு உதவும் எண்ணமிருந்தால் அவர்களுக்கான நிவாரணம் பற்றி சிந்தித்திருக்க வேண்டும் பாலியல் துறை என்பது எல்லா மதத்தினராலும் தரப்பினராலும் எதிர்க்கப்படுகின்ற ஒரு விடயம். ஒரு விலைமாதுவை மக்கள் பார்க்கின்ற விதம் வேறு இவர்கள் பாதாளத்தில் வீழ்ந்தவர்கள் போல்தான் அனைவரும் காண்கிறார்கள் இவர்களை விட்டும் தூர ஓடுகிறார்கள் இவர்களுக்கான நிவாரணம் எவ்வாறு அமைய வேண்டும் விளிப்புணர்வுகளை ஏற்படுத்துவதன் ஊடாக அவர்களை அந்த தொழிலை விட்டே அகற்றவேண்டும் அல்லது இவர்களுக்கு மாற்றுத் தொழில்களை ஏற்பாடு செய்ய வேண்டும் இவர்களுக்கு மனமாற்றத்திற்காக இவர்களை அணுகி இவர்ளுக்கு அறிவுரை வழங்க வேண்டும் இவற்றையெல்லாம் விட்டுவிட்டு அந்த தொழிலிலேயே நிரந்தராமாக இருக்கச்செய்வதற்கும் வீழ்ந்த பாதாளத்திற்குள் மீண்டும் குழிதோண்டுவதாக நடவெடிக்கை மேற்கொள்வது இவர்களுக்கு நண்மை செய்வதாகுமா இதை சிந்திக்க தவறிவிட்டு சட்டரீதியாக இத்தொழிலை மாற்றி இருக்கின்ற இளைஞர்களையும் சமுகத்தையும் சீரழிக்கின்ற முடிவினை எட்டுவதற்கு முயற்சிப்பதா?? அதற்கு ஆதரவாக கருத்தெழுதுவதா?? இதை எவ்வாறு ஏற்றுக்கொள்வது ....??
எழுத்தாளராய் பிரபலமடைய வேண்டிய தேவை இருந்தால் எழுதப்படுகின்ற விடயத்தினையும் கருத்தில் கொள்ள வேண்டும சமுக ஆர்வலர் என்று சொல்லிக்கொண்டு சமுகத்தினை சீர்குலைக்கின்ற விடயங்களையும் மார்கத்தின் கட்டுப்பாடுகளுக்கப்பாலும் எழுதி எம்மை நாமே சீரழித்துக்கொள்வதற்கும் ஒருக்காலும் முன்வரக்கூடாது அதில் என்றும் கவனமாக நடந்து கொள்ள வேண்டும்
விபச்சாரம் என்பது ஒரு சமுகத்தின் தீராத வடு அதற்கான தீர்வு நல்ல பிரஜைகளை உருவாக்குவதும் விளிப்புணர்வுகளுமே அதை விட்டுவிட்டு மீண்டும் தீயிடுவது போல் அங்கீகாரம் அளிப்பது எந்த ஒரு சமுகத்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாது ஒரு விபச்சாரியின் நிலைபற்றி நானும் ஒரு கவிதையில் விபச்சாரியின் குமுறல்..... இவ்வாறு எழுதியிருந்தேன் காலத்தின் மாற்றத்தில் அதில் ஈடுபடுகின்றவர்களின் மனங்களே அவர்ளை கொலை செய்து விடும் அதை விட்டு அதில் உள்ளவர்களை தூரமாக்க வேண்டும் அதுவே சிறந்த சமுக சிந்தனையாக அமைய வல்லது
சர்மிளா செய்யது தனது கருத்துகளை திரும்பப்பெற வேண்டும் அவர் உணராமல் உளறியதை ஒப்புக்கொள்ள வேண்டும்....... நன்றிகள்
மீள்பதிவு : மனிதன் தவறுகளுக்கு மத்தியில் படைக்கப்பட்டிருக்கிறான் என்ற இறைவாக்கின் அடிப்படையில் தவறிளைத்த மனிதன் மன்னிப்பு கேட்கும் போது அதை அனைவரும் மன்னித்தாகவேண்டும் அதன் பின்னர்தான் இறைவன் மன்னிக்கிறான் இந்த வகையில் சகொ.. சர்மிளா தனது தவறை உணர்ந்து மன்னிப்பு கோரியுள்ளார் இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுங்கள் இவ்வாறான தவறுகள் எதிர்காலத்தில் ஏற்படாதவாறு அனைவரும் கவனமாக நடந்து கொள்ளுங்கள்.சர்மிளாவின் பிந்திய கருத்து
0 comments:
Post a Comment