இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Thursday, September 30, 2010

உயிர்த்த காதல்...



பூக்களிலும் மென்மையானவளே
பூத்துக்குலுங்கி காத்திருப்பவளே
பூலோகத்தில் மலர்ந்த மலரானவளே
பூச்சொரியும் நாளுக்காய் காத்திருப்பவளே

உன் சோகம் கண்ட மலர்கள்கூட
உன் மகிழ்ச்சிக்காய் பிரார்த்திக்கின்றன
உன்னருகில் துணை காண
உயிர்களாய் துணைநிற்கிறது 

Wednesday, September 29, 2010

வேற்றுமை வேண்டாமே....(பாபர் மசூதி வளக்கின் தீர்ப்பினை நோக்கி)

மதங்களின் பெயரால் 
மனிதங்கள் அழிந்துவிட
மதங்களே போதிக்காத 
மனிதர்களின் செயலிது 

முன்னோர் ஆண்டனரென
முண்டியடித்து சண்டையிட்டு 
முறன்பட்ட செய்கைகளில் 
முடிந்திடா தொடர்களாகிறது 

Tuesday, September 28, 2010

அன்பைத்தேடும் அனாதையாய்...

என்னருமை தந்தையே 
எப்போழுதும் உன் மொழியில் - மகளே என 
என் காதினை குளிர்த்தாலும் 
என் ஏக்கம் உன்னருகாமைக்கு 

அன்பைத்தேடும் அனாதையாய் 
அரவணைப்பற்ற மழலையாய் 
அலைகிறேன் அப்பா 
அன்னை மறுத்த தந்தை சுகத்திற்காய்

Sunday, September 26, 2010

நிம்மதி தேடும் காதல்...


நிழலாய் நீ தொடர்ந்த போது 
நிஜமாய் மூடியிருந்த என் மனதின் 
நிதர்சனத்தை உணர மறுத்து 
நிம்மதி தொலைத்திருந்தாய் 

நிகழ்வாய் எனைத்தொடர்ந்து 
நிறைவேறாக் காதலுக்காய் 
நிவர்ததிக்க நீ நாடி - என் 
நிம்மதி தொலைக்கிறாய்

நிச்சயமற்ற அடைவுகளுக்காய் 
நிர்க்கதியான வாழ்வின் 
நிலைகளை நகர்த்தி 
நிம்மதி காண்பதில் - காதல் வாளும் 

Thursday, September 23, 2010

கற்பு காத்திடு...







பாவை உன் முகம் பார்த்தேன் 
பார்த்ததும் அடைந்த பரவசத்தில் 
பாதை தடுமாற வைத்ததடி
பார் மறந்தேன் உன் முகம் நினைத்து 

என்னை கதிகலங்கச்செய்து 
என்னை கிறங்கச்செய்த முகம் 
எங்குபார்த்தாலும் என் பின்னே
எப்போது என்னை விட்டுடுவாய் என்றிருந்தேன்

Wednesday, September 22, 2010

நாளைய மன்னனாவாய்...

இளைஞனே உனை நோக்கி 
இன்பமான வாழ்வைச்சொல்ல 
இயற்றிய வரிகளை 
இயன்ற வரை நோக்கிடு 

குழந்தையில் நீ கற்றதை 
குறையின்றி நிவர்த்திக்க 
குதற்கமான வழிகள் திறந்து 
குறியாக்கிடு உயர்வுக்காய் 

Tuesday, September 21, 2010

போர்தொடுத்தேன்..

போதும் போதுமென்ற 
போராட்ட வாழ்க்கையுடன் 
போகின்ற ஆயுளுமாய் 
போர் தொடுக்கும் நாளிகள்


பாசம் எனக்கற்று 
பாராட்டுகள் பிறர் அடைய
பாவம் எனை நினைத்து 
பாசத்திற்காய் போராடினேன் 

சக்தியாகிய முத்தம்...

கண்ணே நீ கற்றிந்த காதலை
கண்மூடித்திறப்பதற்குள்
கதிகலங்கும் முத்தமாய்
கற்றுத்தந்து கிறங்கச்செய்தாய் 

மொழிகளே அற்ற காதலுக்கு 
மொழியமைத்தவள் நீ 
மொத்தமாய் உணரத்தி 
மொட்டு மலரந்திட வைத்தவள் நீ 

Monday, September 20, 2010

ஈகரை தமிழ் களஞ்சியத்தின் 3வது ஆண்டு சிறப்புக்கவிதை..

பத்தாயிரம் கடந்த உறவுகண்டு
பல்லாயிரம் பதிவுகள் ஏற்று
பதிவுலகில் சிறந்த தளமாய்
பரபரக்கும் ஈகரையின் 3வது பிறந்தநாள்

பாரில் உருவெடுத்த
பாசமான அன்னையாய்
பாகுபாடுகளற்று நட்புடன்
பாவெழுதி பாராட்டப்படும் ஈகரை

உன்னதமான நேசர்களாய்
உறவு கலந்த தோழர்களாய்
உலவுகின்ற படைப்பாளிகளே
உயிரோட்டம் ஈகரைக்கு

Sunday, September 19, 2010

நீ வருவாயென...




உன்னோடு கடந்த நாட்கள் 
உனக்காக தவமிருக்கிறது 
உன்னினைவுகளின் ஸ்பரிசங்களுடன் 
உயிர்பெறும் நாளுக்காக

Saturday, September 18, 2010

உள்ளத்தை வருடினாய்...





உன் அரிய குணத்தின் 
உயிர்த்த நிமிடத்தில் 
உள்ளக்கிடக்கையின் 
உச்சத்தை நாடினேன்

நாவு துடிக்கிறது 
நாலு வரியேனும் உமிழாது
நாடித்தவிக்க விட்டு 
நாதியற்று விட்டிருந்தாய் 

Thursday, September 16, 2010

தனிமையின் தவிப்பில்..



தனிமையின் தவிப்பில்
தளிர்விடும் உணர்வுகளை
தட்டிப்பறிக்கும் உயிர்களால்
தனிமையாகும் மனிதங்கள்

உழைப்பதற்காய் அடியெடுத்து
உறவு திறந்து தனிமையுடன்
உயிரோடு மட்டுமான வாழ்கை
உணராத உரிமையாளர்கள்

Wednesday, September 15, 2010

நெருடும் வாழ்க்கை..


பெண்ணாய் பிறந்தேன்
பெருமிதம் கொண்டேன்
பெருவாழ்வும் அடைந்து
பெற்ற நிலைகளில் பெருமிதம்

துணை கொண்ட நாள்
துயர் துறந்ததாகியது
துக்கம் மறந்திருந்து
துயில் கொள்ள மறுத்தது

சேய் ஒன்று நானடைந்து
சேய் என்ற நிலை மறந்து
சேதாரம் இல்லாத அன்பினை
சேர்ந்திட துடிக்கும் உறவுகளுடன்

தாயன்பை காத்திட
தாரமாய் சுமை அதிகம்
தாலியின் உறவுகளும்
தாவுகின்ற ஆழுமையுடன்

நெருக்கடியான நிலைகளில்
நெருடல்கள் தீர்த்திட
நெஞ்சம் துடித்து
நெகுழும் காலமதிகம்

அன்பு நிறைந்த எனக்கு
அதிகமான உறவிருக்க
அலாதியான வாழ்வுடன்
அன்பை மட்டும் தேடுகிறேன்


குறிப்பு : என் தோழியின் நெருக்கடியான வாழ்க்கை பற்றி கூறியதில் உருவான கரு

Thursday, September 9, 2010

என்னவளின் பிறந்தநாள்

அலங்காரமில்லாது
அனுதினமும் மகிழ்ந்திட
அமைதியாக இன்னாளை
அன்போடு போற்றுகிறேன்

எனையாளும் அரசியாய்
என்னை வசீகரித்த
எழிலரசியே நீ
எனக்காக அவதரித்த தினமானதே

உன் அரிய குணத்தில்
உத்தமியாய் எனைக்கவர்ந்து
உலகம் உன்னாலென
உணர்த்திவிட்டாய் எனை அடைந்து

இன்று பிறந்த தினமென்று
இவ்வுலகை யாழும் தினமென்று
இல்லறம் நாடத்துடிக்கிறது
இருந்தும் தூரம் எமை தடுக்கிறது

அன்பானவளே உனை
அகிலம் போற்ற என்னுள் ஏந்தினேன்
அன்புக்கடலாய் நீயிருக்க
அதில் நான் தத்தளிக்கிறேன்

இன்னாளென்ன உனக்கு
என்னாளும் திருநாளாய்
இறைவனின் துணையுடன்
எப்பொழுதும் மலர்ந்திட வேண்டுகிறேன்

வரிகள் மட்டும் வாழ்த்தாகிட
வானகமும் மண்ணககும் சாட்சியாகிட
எம் காதலுலகில் ஒவ்வொரு நாளும் திருநாளே
என்றும் நீ சிறந்திட வாழ்த்துகிறேன்


Wednesday, September 8, 2010

தர்மத்தின் திருநாள் நோன்புப் பெருநாள்..

மாதம் ஒன்று நோன்பிருந்து
மாறா பக்தியும் தினமடைந்து
மாசுகள் பல அகற்றிட வேண்டி
மாற்றி அமைத்த ஈமானுடன் -புதிய
மாந்தர்களாய் - மலரும்
மாதத்தின் முதல் நாள் எங்கள் திருநாள்

நோன்புப்பெருநாள் - ஏழைகளின்
நோவினை தீர்க்கும் நாள்
நோன்பின் பிரதிபலன்களாய் - வறியவர்களை
நோக்கி வாரி வழங்கும் கொடைநாள்

மனிதனாய் பிறந்ததில்
மனிதம்களை சமமாய் நோக்கி
மகிழ்ச்சியுடன் தர்மம் அழித்திட
மலரும் நன் நாள்

பகைமைகளகற்றி நல்ல
பண்புடன் உறவுகளை நோக்கி
பரிவுடன் அளவளாவி
பசி தீர்க்கும் உன்னத நாள்

கண்டிப்புடன் (பித்ரா) ஒரு தலைக்கு
கணக்கிட்டு செல்வங்கள் சேர்த்து
கட்டுக்கோப்பினை வலியுறுத்தி
கனிவுடன் அழித்திடும் நாள்

புத்தாடையுடன் பாலர்களும்
புத்துணர்வுடன் இளைஞர்களும்
புதுப்பொலிவுடன் உறவுகளுமாய்
புள்ளரிக்கும் புதுமை நாள்

மலரும் இத்திருநாளை
மகிழ்வுடன் வரவேற்று
மனித அவலங்கள் தீர்ந்திட பிரார்தித்து
மகிழ்ச்சி மட்டும் அடையும் நாளாய்
மனதாற ஆர்ப்பரித்து
மகிழ்ந்திட என் பிரார்த்தனையுடனான வாழ்த்துகள்


நண்பர்கள் வாசகர்கள் ஊக்குவிப்பாளர்கள் உறவுகள் அனைவருக்கும் என் இனிய நோன்புப்பெருநாள் நல்வாழ்த்துகள்


Tuesday, September 7, 2010

உந்தன் அணைப்பில்....










எத்தனை சுகமடி
எதிலுமில்லாத சுகமடி
என் தோள் தொட்டு வாரி அணைத்து
எனக்களித்த இன்ப சுகம்

உன் மார்பில் முகம் புதைத்து
உலகை மறந்த கணம்
உன் நினைவுகள் எனக்காக
உருகுவதை ஒப்புவிக்கிறது

அன்பே என் ஆருயிரே
அணைப்போடு இருந்து விட்டால்
அகிலத்தின் துயர் தெரிவதில்லை
அந்தம் அடையுமட்டும்
அப்படியே உயிர்த்திடணும்

எட்ட இருந்து கண்டிராத
எழுச்சி மிக்க அணைப்பை
எம் காதலின் இறுக்கத்தில்
எனக்களித்தாய் என் தேவதையே

இயற்கை ஈர்ப்பில்
இன்றைய உந்தன் அணைப்பில்
இயன்றவரை உனை ஆழ்கிறேன்
இறுகிய அணைப்பை என்றும் நாடுகிறேன்

படம் தந்த கவிதை ரசனைக்காக

Monday, September 6, 2010

பிறப்பின் அடைவு....


மரண ஓலம்
மதியின் அந்தம் தொட
மங்கல வினாடிகள் மங்கிட
மடிந்த நிமிடம் சோகங்களாகிறது

மலர்ந்த ஜீவராசிகள்
மரணம் வென்றிடாது
மடிவது உறுதி என
மதங்களும் போதிக்கிறது

பிறப்பின் அடைவு இறப்பாகிட
பித்துப்பிடித்த மானிடனாய்
பின்னர் பின்னர் என
பிற்போக்குடன் வாழ்கிறர்

மரணம் அடையுமுன்
மகிழ்வுடன் நண்மை செய்து
மட்டற்ற சுவனம்
மறுமையில் அடைந்திடணும்

வாழ்கைப் பயணத்தில்
வாழ்ந்த தடங்களுக்காய்
வாய்ப்புகள் அமைத்து
வாய்மையினை வென்றிடணும்

Saturday, September 4, 2010

வறுமை கொடியது..


வாழ்கை தேடி
வாழும் மானிடமதிகம்
வாஞ்சையுடன் நோக்கிட
வாதிகளோ பஞ்சம்

வயிற்றுப்பசி தீர்த்திட
வழியே இல்லாது
வறுமைக்குள் சிக்கி
வலியில் தவிக்கிறர்

செல்வம் கொட்டிக்கிடந்தும்
செம்மலாய் சீர்செய்யாது
செளிப்பற்ற கஞ்சத்தனத்துடன்
செறிந்த உலோபிகள்

வறுமை கொடியது
வல்லமையுடன் ஆட்டிவைக்கிறது
வழி தவறும் மனிதத்தை உருவாக்கிறது
வகை செய்து அகற்றுதல் தர்மம்

ஆயுள் குறைந்த மானிடமே
ஆகாரம் தேடுவோரை
ஆதரவுடன் நோக்கி
ஆசைகளகற்றிட்டால் வறுமை அகன்றிடும்

Thursday, September 2, 2010

ஈகரைத்தாய்...

உலகம் கண்ட
உன்னதத் தாய்மைகளுள்
உயிரற்ற தாயென
உறவு கலந்த ஈகரைத்தாய்

உமை ஈன்ற சிவா
உனக்குத்தாய்
உனை அடைந்த
உறவுகளுக்குத் தாயாக நீ

எத்துயரில் நீயிருந்தும்
எழுந்து வரவேற்று
எழிதாகப் பாசமழை
எப்பொழுதும் வீசுகிறாய்

உன்தாயின் போற்றுதலும்
உடன் பிறப்பின் பராமரிப்பில்
உளமகிழும் நீ
இன்முகத்தில் என்னாளும்

தாயன்பைத்தேடும் அனாதைக்கும்
துணையன்பைத்தேடும் அபலைக்கும்
உன் அரவணைப்பில்
சாந்தமாய் திழைக்கின்ற சுகம்

ஒரு முகம் உனக்கிருந்தும்
உலகம் முழுதும் பார்க்கிறாய்
உனைக்கண்ட முகம் சுழித்தாலும்
சழைக்காத இன்முகம் உன்னதுதான்

தமிழ் தாகத்தின்
உண்மை உணர்வில்
உனையடையும் எச்சேயும்
உனையகலா வசியம் செய்கிறாய்

தாயே.... நீயின்றிய
சில நொடிகளில்
உன் மீதான காதலை
உணரச்செய்தவள் நீ

உலகம் முடியும் வரை
அழிந்திடா அன்னையே
உன் தயவில் என்
உலகவலம் தினமும்தான்

குறிப்பு: என்னைப்போன்ற பல்லாயிரம் கவிஞர்களுக்கு ஊக்கமளிக்கும் தளமான ஈகரையைப்பற்றி அதன் போட்டிக்காக எழுதப்பட்ட கவிதையிது இதனை எனது பக்கத்திலும் நண்பர்களின் பார்வைக்கு சமர்ப்பிப்பதில் ஆனந்தம்

Wednesday, September 1, 2010

உதிர்ந்த நட்பை தேடி..



உன்னால் உருக்கி
உருவாக்கப்பட்ட என்னால்
உன் தொடர்பு துண்டிப்பில்
உலகை உணர மறுக்கிறேன்

உன் நட்பில் ஆழ்ந்து
உண்மை அன்பினால்
உணர்ந்த் எம் உறவின்
உஷ்ணம் தணியவில்லை

உற்ற தோழமையுடன்
உனக்காக எதையும் நாடி
உதிர்த்த மொழிகளோடு
உன் தரிசனம் தேடுகிறேன்

உலவு பார்த்த வேடர்களால்
உள்ளவைகள் உணராது
உமிழ்ந்த மொழிகளில்
உளம் நொந்தழுதாயோ..

உன் துயர்களை மென்று
உன் பாவனையில் வென்று
உன் நட்பை மறந்து
உன் நாட்டம் தடுத்தாயே..

உடலை விட்டகன்ற உயிராய்
உன் தயவில் ஒரு சொல்நாடி
உதிர்ந்த நட்பை தேடி
உலவுகிறேன் உன்வழியில்...




Related Posts Plugin for WordPress, Blogger...