இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Wednesday, September 29, 2010

வேற்றுமை வேண்டாமே....(பாபர் மசூதி வளக்கின் தீர்ப்பினை நோக்கி)

மதங்களின் பெயரால் 
மனிதங்கள் அழிந்துவிட
மதங்களே போதிக்காத 
மனிதர்களின் செயலிது 

முன்னோர் ஆண்டனரென
முண்டியடித்து சண்டையிட்டு 
முறன்பட்ட செய்கைகளில் 
முடிந்திடா தொடர்களாகிறது 


உலகமே திரும்பிப்பார்த்த 
உயிரிழப்பைத்தாங்கி
உயிர்த்து நிற்கும் 
உணர்வுகளின் எழுச்சியிது 

எச்சமேனும் எஞ்சிடாத 
எளளவு உலகமிது 
எல்லோரும் உணர்ந்துவிடின் 
எங்கெங்கும் சந்தோசமே 

தீர்ப்பு நோக்கியிருக்கும் 
தீர்க்கதரிசிகளே, நிதர்சனம் உணர்ந்து 
தீர்மானம் எதுவாகிடினும் 
தீர்த்திடுங்கள் வெறுப்புகளை

மீண்டுமொரு அவலம் 
மீழ உருவாக்கி
மீழாத்துயருடன் வேற்றுமை வளர்த்து 
மீதமான உயிர்களை போக்கிடாதீர்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

4 comments:

யாதவன் said...

உங்கள் வேண்ட்டுகோள் நிறைவேற எல்லாருக்கும் பொதுவான இறைவனை பிராத்திக்கிறேன்

சசிகுமார் said...

super fantastic great

நேசமுடன் ஹாசிம் said...

@யாதவன்

அனைவரும் பிரார்த்திப்போம்
நன்றி நண்பா

நேசமுடன் ஹாசிம் said...

@சசிகுமார்

நன்றி நண்பா

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...