இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Sunday, September 19, 2010

நீ வருவாயென...
உன்னோடு கடந்த நாட்கள் 
உனக்காக தவமிருக்கிறது 
உன்னினைவுகளின் ஸ்பரிசங்களுடன் 
உயிர்பெறும் நாளுக்காக


எம் காதல் லீலையில் வெட்கித்து
எதிரொலித்த வண்ண நிலவும் 
எட்டிநின்ற தென்றல் காற்றும் 
எப்பொழுதும் வினவுகிறது 

உணராத உஸ்ணங்களை 
உணர்த்தி விட்டு சென்றதனால் 
உயிர்பெற்ற நாடிகள் 
உறங்க மறுக்கிறது 

காதலின் ஆத்மீகம் கண்டதில் 
காலமெல்லாம் தவிக்கின்ற 
காதலியாகி கனிந்திருக்கிறேன் 
காவுகொள்ள நீ வருவாயென..

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

1 comments:

சசிகுமார் said...

நண்பா எங்கே இருந்து தான் உங்களுக்கு இது போல கவிதைகள் உதிக்கின்றனவோ அருமை ஹாசீம்.

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...