இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Tuesday, September 21, 2010

போர்தொடுத்தேன்..

போதும் போதுமென்ற 
போராட்ட வாழ்க்கையுடன் 
போகின்ற ஆயுளுமாய் 
போர் தொடுக்கும் நாளிகள்


பாசம் எனக்கற்று 
பாராட்டுகள் பிறர் அடைய
பாவம் எனை நினைத்து 
பாசத்திற்காய் போராடினேன் கல்விக் கூடங்களடைந்து 
கற்க முடியாத கல்வி நாடி
கற்றவனை கண்டு நொந்து 
கல்விக்காய் போராடினேன் 


காதல் கொள்ள நாடி 
காதலியின் ஏமாற்றத்துடன் 
காதலர்களின் ஊடல்கண்டு 
காதலுக்காய் போராடினேன் 


திருமணத்தால் முடியுமென்று 
திருமண முறிவடைந்து 
திகைப்பூட்டும் குடும்பங்கண்டு 
திருமணத்திற்காய் போராடினேன் 


செல்வமே தேவை என்று 
செல்லாக்காசாகி நின்று 
செல்வந்தனின் களிப்பு கண்டு 
செல்வத்திற்காய் போராடினேன் 


குழந்தைதான் நிம்மதி என்று 
குழந்தை பெற நாதியற்று 
குழந்தைகளின் மொழிகேட்டு 
குழந்தைக்காய் போராடினேன் 


அமைதிதான் வாழ்க்கை என்று
அமைதியற்ற நிலையும் அடைந்து 
அமைதியான மரணம் கண்டு 
அமைதிக்காய் போராடுகிறேன்.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

2 comments:

சசிகுமார் said...

கவிதையில் கலக்கும் நண்பா வாழ்த்துக்கள்.

நேசமுடன் ஹாசிம் said...

@சசிகுமார்
உங்களை விடவா நண்பா

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...