இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Wednesday, September 15, 2010

நெருடும் வாழ்க்கை..


பெண்ணாய் பிறந்தேன்
பெருமிதம் கொண்டேன்
பெருவாழ்வும் அடைந்து
பெற்ற நிலைகளில் பெருமிதம்

துணை கொண்ட நாள்
துயர் துறந்ததாகியது
துக்கம் மறந்திருந்து
துயில் கொள்ள மறுத்தது

சேய் ஒன்று நானடைந்து
சேய் என்ற நிலை மறந்து
சேதாரம் இல்லாத அன்பினை
சேர்ந்திட துடிக்கும் உறவுகளுடன்

தாயன்பை காத்திட
தாரமாய் சுமை அதிகம்
தாலியின் உறவுகளும்
தாவுகின்ற ஆழுமையுடன்

நெருக்கடியான நிலைகளில்
நெருடல்கள் தீர்த்திட
நெஞ்சம் துடித்து
நெகுழும் காலமதிகம்

அன்பு நிறைந்த எனக்கு
அதிகமான உறவிருக்க
அலாதியான வாழ்வுடன்
அன்பை மட்டும் தேடுகிறேன்


குறிப்பு : என் தோழியின் நெருக்கடியான வாழ்க்கை பற்றி கூறியதில் உருவான கரு

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

10 comments:

தமிழ்த்தோட்டம் said...

அருமை, வாழ்த்துக்கள், அருமையான வரிகள்

நேசமுடன் ஹாசிம் said...

@தமிழ்த்தோட்டம்

மிக்க நன்றி தங்களின் முத்தான சொற்களுக்கு

abul bazar/அபுல் பசர் said...

// அன்பு நிறைந்த எனக்கு
அதிகமான உறவிருக்க
அலாதியான வாழ்வுடன்
அன்பை மட்டும் தேடுகிறேன் //

இதயத்தை ஈட்டிக்கொண்டு குத்திய
வலிகள் இந்த வரிகள்.
கவிதை அருமை
வாழ்த்துக்கள் ஹாஷிம்

நேசமுடன் ஹாசிம் said...

@abul bazar/அபுல் பசர்

மிக்க நன்றி தங்களின் வரிகளுக்கும் வருகைக்கும்

சசிகுமார் said...

அருமை நண்பா ஹாசீம்

யாதவன் said...

அழகாக பாடல் போல போகிறது வரிகள்
வாழ்த்துக்கள்

நேசமுடன் ஹாசிம் said...

@சசிகுமார்

நன்றி நண்பா

நேசமுடன் ஹாசிம் said...

@யாதவன்

ஏதோ எம்மாலான முயற்சி நண்பர்களின் ஊக்கமான வரிகளில் அத்தனையும்

தமிழ்தோட்டம் said...

@நேசமுடன் ஹாசிம்

தொடர்ந்து எழுதுங்கள்

நேசமுடன் ஹாசிம் said...

@தமிழ்தோட்டம்

கண்டிப்பாக எழுதுகிறேன் உயிர் உள்ளவரை மிக்க நன்றி உங்களின் ஊக்கத்திற்கு

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...