இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Tuesday, September 7, 2010

உந்தன் அணைப்பில்....


எத்தனை சுகமடி
எதிலுமில்லாத சுகமடி
என் தோள் தொட்டு வாரி அணைத்து
எனக்களித்த இன்ப சுகம்

உன் மார்பில் முகம் புதைத்து
உலகை மறந்த கணம்
உன் நினைவுகள் எனக்காக
உருகுவதை ஒப்புவிக்கிறது

அன்பே என் ஆருயிரே
அணைப்போடு இருந்து விட்டால்
அகிலத்தின் துயர் தெரிவதில்லை
அந்தம் அடையுமட்டும்
அப்படியே உயிர்த்திடணும்

எட்ட இருந்து கண்டிராத
எழுச்சி மிக்க அணைப்பை
எம் காதலின் இறுக்கத்தில்
எனக்களித்தாய் என் தேவதையே

இயற்கை ஈர்ப்பில்
இன்றைய உந்தன் அணைப்பில்
இயன்றவரை உனை ஆழ்கிறேன்
இறுகிய அணைப்பை என்றும் நாடுகிறேன்

படம் தந்த கவிதை ரசனைக்காக

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

2 comments:

சசிகுமார் said...

/*எட்ட இருந்து கண்டிராத
எழுச்சி மிக்க அணைப்பை
எம் காதலின் இறுக்கத்தில்
எனக்களித்தாய் என் தேவதையே*/

நண்பா என்ன நாளுக்கு நாள் உங்கள் கவிதை பட்டையை கிளப்புது

நேசமுடன் ஹாசிம் said...

அத்தனையும் ரசனையின் படைப்புகள்
நன்றி நண்பா

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...