இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Sunday, July 31, 2011

றமழானே வருக றகுமத்தை தருக.....



அடைந்த வருடங்களெல்லாம் 
உனையடைந்திருந்தேனே!! 
கண்ணியமாய் உனையடைந்து - உன் 
கருணைபெற்று வழியனுப்பினேனோ.... 


உன் பற்றிய சரித்திரங்கள் பல்லாயிரம் 
உரைத்திடக்கேட்டிருந்தேனே......
உன் வழியில் என்னை நிலைநிறுத்தினேனா??
உன்னிடமே கேட்கத் தோன்றுகிறது 


செறிந்த றகுமத்திற்கு சொந்தக்காறராம் நீ 
சென்ற வருடங்களில் எனக்காக 
எத்தனை மடங்கு சேர்த்துவிட்டுச்சென்றாய் 
விடைதெரியாத கேள்விகளோடுள்ளேனே 

Saturday, July 30, 2011

அவளாகிய அவள்...(தொடர்கவிதை 02)



நான் அறிந்திருந்திடாத
பருவம் எனை அடைந்தபோது
தாயம்மாளின் அரவணைப்பில்
தாய்ப்பாசம் உணர்ந்த
நொடிகளின்னும் மறக்கவில்லை

தோழமையின் ஆரவாரத்துடன்
அகமகிழ்ந்த பூப்பெய்துவிழவில்
வெட்கித்தலை குனிந்து
வேதனைகள் மறந்தநிலை
என் வாழ்நாளில் மறக்கவில்லை

Wednesday, July 27, 2011

மரணமும் எமக்கு கற்றுத்தருகிறது



மனித வாழ்வின் அந்தம் மரணமாகிறது 
மரணமும் மனிதனுக்கு கற்றுத்தருகிறது 
மனிதனாய் உன்னை வளப்படுத்திடு 
நித்தியமற்ற உயிரோடுள்ளதுன் வாழ்வென்று 

எங்கு மரணம் கண்டாலும் 
மனம் மட்டுமே போராடுகிறது 
மதியின் போராட்டத்தில் 
நாட்களே வென்றுவிடுகிறது

சோகங்களெமை ஆழம்போது 
சுமைகளை நினைக்கத்தோன்றுகிறது 
உறவொன்றின் சோகமெமை 
நிலைகுலைந்திடச் செய்திருந்தது 

Sunday, July 24, 2011

அவளாகிய அவள்.......(தொடர்கவிதை 01)



பிறப்பால் அனாதையாக்கப்பட்டு 
வளர்ப்புக்கு அனாதரவற்று 
அகிலத்தில் ஓர் மகளாய் 
அவதரித்த நிலை மறக்கவில்லை

வயிற்றுக்கு உணவுதேடி 
வழியற்று வரம்புமீறாது 
ஒரு தியாலத்துணவுடன் 
பல தினம் பசியோடு 
அழுதநிலை மறக்கவில்லை 

படைத்தவனின் கருணையினால் 
பாதசாரி ஒரு மனிதனால் 
உணர்ந்த பரிதாபத்தில் 
நான் சேர்ந்த அனாதையில்லம் 
இன்னுந்தான் மறக்கவில்லை 

Tuesday, July 19, 2011

இரண்டும் இருகண்களே...


அன்னையால் ஆனதெல்லாம் 
அகிலத்தில் அடைந்திடமுடியாது 
அம்மா உன் மௌனத்தில் - என் 
அசைவுகளை மறந்துவிடுகிறேன் 

உன்னாலான உருவத்திற்கு 
உணர்வுகளாய் நீயிருக்க - என்
உயிராய் நீயளித்தவளை 
உறவுகொள்ள மறுப்பதேன் 

அம்மா நீயென்னுலகம் என்றிருந்தேன் 
அரியபாசம் அவளும் எனக்களித்தாள் 
அன்பில் சிம்மாசனம் நீயானபோது 
அரவணைப்புக்கு சிகரமாய் அவளிருந்தாள் 

Monday, July 18, 2011

தேசங்களின் ஒற்றுமை...



இயற்கை அன்னை ஈன்றளித்த
கடல்மாதா மடிமீது
தவழும் குழந்தைகளாய் மீனவர்கள்
ஒரு சாண் வயிற்றுக்கு
இரைதேடும் மனிதர்கள்

காரிருள் கண்ணை மறைக்க
காற்றின் திசைகளினூடே
ஓடத்தின் ஓட்டத்தில்
விடிந்த பின் தரைதேடுகிறார்கள்

Wednesday, July 13, 2011

மௌனம் கலைத்துவிடு...

மனங்களொத்துறவாடி 
மகிழ்ந்திருந்த பொழுதுகளுக்குத்
துரோகமாய் இன்றுன் மௌனம் 

என் வாழ்வில் எதிர் பார்த்திருந்திடாத 
உன்னத நட்புறவாடினாய் 
உயிராயென்றும் கலந்திருந்தாய் 

உலகில் மரணந்தவிர 
எம் பந்தம் காணாது அந்தமென்ற 
உன் மொழி என் காதில் 
இன்னும் ஒலிக்கிறது

Monday, July 11, 2011

அரசியல் நீதவான்கள்.....



ஆதிமனித அவதாரம்தொட்ட
ஆட்சி பீடங்களின் சலசலப்புகள்
மனிதன் வாழுமிடங்களெல்லாம்
ஆளுகின்ற வர்க்கங்கள்

சமகால அரசியலில்....
சிம்மாசனம் ஏறும்வரை ஏதுவாதப்பிரச்சாரங்கள்
விமர்சனங்களின் பிரதிபலிப்பில்
எதிரிகளாகும் வாக்காளப்பெருமக்கள்

போர்க்களங்களாய் மாறி
வஞ்சம் தீர்க்கும் நெஞ்சங்களாய்
என் கட்சி உன்கட்சியென்று
அனியாயமாய்ப் பாமரனின் உயிரிழப்புகள்

Friday, July 8, 2011

மலரா மொட்டொன்று பூவானது



காதல் சொல்லவந்தேன் உன்னிடம்
காவல் எனைச்சுற்றி என்றுவிட்டாய்
ஏற்றுவிடு என்னையும் இல்லையேல்
ஏந்திடுவேன் சாவின் எல்லையை என்றேன்

வீராப்புப் பேசிவந்தாய்
வீண்வாதம் உரைத்துவந்தாய்
என்காதலுக்கென்ன குறை கண்டாய்
கனிந்துவிடு கண்மணி என்றேன்

தட்டிப்பணித்து என்னையும்
தட்டுத்தடுமாறிடச் செய்வதற்கா??
காதல் மொழி பேசிக் கண்ணனாய்
வலம் வருகிறாய் என்றாய்..

Wednesday, July 6, 2011

பார் பார்த்து பரிகாசம் செய்கிறது

நண்பனே நகைக்கிறதடா உலகம்
நம்தேசம்விட்டு நாம்கொண்ட வாழ்வோடு
சந்தோசங்கெட்ட சலனங்களால்
சஞ்சாரமான நாழிகைகள்

கண்கட்டிக் காட்டில் விட்டதுபோல் - எம்
வேலைதேடிய வெளிநாட்டு வாழ்க்கை
ஆயிரம் உறவுதிறந்த உணர்வுகளோடு
எம்தேசத்தவன் எங்கிருக்கிறான்
என்றல்லவா தேடுகிறது மனம்

ஆழத்தேடலில் அடைந்த நட்பும்
ஆரத்தழுவலில் அன்னையுலகம் காண்கிறது
தொலைந்த உறவுகளை அடைந்த உணர்வுடன்
தொலைவில் கிடைத்த தொன்மையாகிறது

Saturday, July 2, 2011

கரம் நீட்டும் மாதா வேண்டும்



எனை ஈன்றவளே உனக்குப் புரிந்திருக்குமா
இந்தப் பொல்லாத கொடுமையினை
வீதியில் விட்டுச்செல்வதற்கேன்
வீணாக ஈன்றெடுத்தாய்

பசியெடுக்கும் உடலோடு
பகலிரவாய் தவிக்கிறேனே
பாழ்பட்ட மனிதர்களுள்
பாவிகளைத்தான் காண்கிறேனே

கோடி கொடுத்துக் காக்கின்ற நாயை விட
கேவலமாக மதிக்கப்படும் மனிதங்களாக
அப்பாவிகளிங்கு அல்லல்படுகிறதென்று 
உரக்கக்கதறியும் கேட்கவில்லையாருக்கும் 

Friday, July 1, 2011

ஏக்கம் உனக்கு வேதனை எனக்கு (4வது பிறந்தநாள்)



உனைப்பிரிந்த பொழுதுகளை நினைத்து
உள்ளம் உருகிறதென் கண்மணியே
அப்பாவென்றழைத்து - என்
வருகையின்றிய ஏக்கத்தை
வெளிப்படுத்திய போதெல்லாம்
கண்கள் மட்டும் குளமாகிறது

வேதனைமறக்க உன்
புகைப்படம் பார்க்கிறேன்
என் விதியை நினைத்து
என்னை நான் வைகிறேன்

எத்தனை கோடிப்பணமிருந்தாலென்ன
நித்தமொரு வாகன சொகுசிருந்தாலென்ன
அருகாமையில் உள்ள ஒரு சொல்லின்
சுகம்போல் வருமா? என்றுணர்த்திய
ஏக்கததைக்கூட ஈடுசெய்ய முடியாத
துர்ப்பாக்கியத் தந்தை நான்




Related Posts Plugin for WordPress, Blogger...