இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Saturday, July 2, 2011

கரம் நீட்டும் மாதா வேண்டும்எனை ஈன்றவளே உனக்குப் புரிந்திருக்குமா
இந்தப் பொல்லாத கொடுமையினை
வீதியில் விட்டுச்செல்வதற்கேன்
வீணாக ஈன்றெடுத்தாய்

பசியெடுக்கும் உடலோடு
பகலிரவாய் தவிக்கிறேனே
பாழ்பட்ட மனிதர்களுள்
பாவிகளைத்தான் காண்கிறேனே

கோடி கொடுத்துக் காக்கின்ற நாயை விட
கேவலமாக மதிக்கப்படும் மனிதங்களாக
அப்பாவிகளிங்கு அல்லல்படுகிறதென்று 
உரக்கக்கதறியும் கேட்கவில்லையாருக்கும் 


கொட்டிவிடும் உணவுகளைக் கூட 
ஏந்திநிற்கும் குழந்தையெனக்கு கொடுத்திட 
இரங்காத மனங்களைக் காண்கிறேன் 
இரக்கமின்றியேன் எனையும் தவிக்கவிட்டாய் 

அப்பா முகம் தெரியவில்லை 
ஆதரவுக்கென்று யாருமில்லை 
அனாதரவுடன் அவதியுறுகிறேன் 
அம்மா நீ.......... எங்கிருக்கிறாய் 

என்போன்ற பலநூறு ஏழைகளோடு 
என்நிலையும் மாறிடுமா??
கரம் நீட்டும் மாதாவொன்றினை 
காட்டிவிடு படைத்தவனே.....

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

2 comments:

# கவிதை வீதி # சௌந்தர் said...

கனமான கவிதை

vidivelli said...

என்போன்ற பலநூறு ஏழைகளோடு
என்நிலையும் மாறிடுமா??
கரம் நீட்டும் மாதாவொன்றினை
காட்டிவிடு படைத்தவனே.....

supper.....
valikal niraintha kavithai...
valththukkal....

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...