இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Friday, July 8, 2011

மலரா மொட்டொன்று பூவானதுகாதல் சொல்லவந்தேன் உன்னிடம்
காவல் எனைச்சுற்றி என்றுவிட்டாய்
ஏற்றுவிடு என்னையும் இல்லையேல்
ஏந்திடுவேன் சாவின் எல்லையை என்றேன்

வீராப்புப் பேசிவந்தாய்
வீண்வாதம் உரைத்துவந்தாய்
என்காதலுக்கென்ன குறை கண்டாய்
கனிந்துவிடு கண்மணி என்றேன்

தட்டிப்பணித்து என்னையும்
தட்டுத்தடுமாறிடச் செய்வதற்கா??
காதல் மொழி பேசிக் கண்ணனாய்
வலம் வருகிறாய் என்றாய்..

இல்லையெடி என்னவளே
உன்னோடு வாழ்ந்து மடிந்திட
உணர்வுகள் துடிக்கிறது
துரோகமற்ற காதல் என்னதடி என்றேன்

ஏனிந்த வாதமுனக்கு
ஏற்றிவிடு பூமாலையொன்று
ஏந்திவிடு பூவாக என்னையே” என்றாய் - ஏற்றியதனால்
மலராய்ச் சூடுகிறேன் தினமும் உன்னையே

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

2 comments:

Niroo said...

வடை

இராஜராஜேஸ்வரி said...

ஏனிந்த வாதமுனக்கு
ஏற்றிவிடு பூமாலையொன்று
ஏந்திவிடு பூவாக என்னையே” என்றாய் - ஏற்றியதனால்
மலராய்ச் சூடுகிறேன் தினமும் உன்னையே//

அருமையாய் மனமுரைத்து மலர்ந்த கவிதைக்குப் பாராட்டுக்கள்.

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...