இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Friday, July 1, 2011

ஏக்கம் உனக்கு வேதனை எனக்கு (4வது பிறந்தநாள்)உனைப்பிரிந்த பொழுதுகளை நினைத்து
உள்ளம் உருகிறதென் கண்மணியே
அப்பாவென்றழைத்து - என்
வருகையின்றிய ஏக்கத்தை
வெளிப்படுத்திய போதெல்லாம்
கண்கள் மட்டும் குளமாகிறது

வேதனைமறக்க உன்
புகைப்படம் பார்க்கிறேன்
என் விதியை நினைத்து
என்னை நான் வைகிறேன்

எத்தனை கோடிப்பணமிருந்தாலென்ன
நித்தமொரு வாகன சொகுசிருந்தாலென்ன
அருகாமையில் உள்ள ஒரு சொல்லின்
சுகம்போல் வருமா? என்றுணர்த்திய
ஏக்கததைக்கூட ஈடுசெய்ய முடியாத
துர்ப்பாக்கியத் தந்தை நான்


மழலை மொழிகடந்தாய்
நித்தம்ஒரு சொல்லால் மகிழ்விக்கிறாய்
கேட்கும் இனிமையில்மாத்தரம்
பித்துப்பிடித்தவன் போல்
உன் பாசத்திற்காய் நானும் ஏங்குகிறேன்

காலம் இத்தனை வேகமாவென்று
உன் நான்காவது பிறந்ததினத்தில் வியக்கிறேன்
ஒவ்வொரு வருடமும் உதிர்த்த வரிகளோடு
இம்முறையும் பிரிவின் துயர்களை சுமைகளாக்கி
வேதனைக்கு முற்றுப்புள்ளியிடுகிறேன்

உன் பிறப்பில் உளமகிழ்ந்திருந்தேன்
என்னுயிரைவிட அதிகமாய்
உன்னை நேசிக்கிறேன்
உன் எதிர்காலம் சிறந்திட பிரார்த்திக்கிறேன்பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

11 comments:

kalainilaa said...

நிலவுக்கு பிறந்த நாள்
சூரியனை அழைத்து வாழ்த்து சொல்ல சொல்லுங்கள் .

மலருக்கு பிறந்த நாள்
தென்றலை அழைத்து வாழ்த்து சொல்ல சொல்லுங்கள் .

தூரத்தில் நீ இருந்தாலும்,
இதோ உன் மாமனின் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

மழைகள் போல,
குடைகள் போல,
கொடையோடு வாழு,
தடை தாண்டி,
படை வென்று வாழு!
தொழுவது கடமை
கொடுப்பது நன்மை,
நபி வழி உண்மை,
அறிந்துக்கொண்டால் விலகும் தீமை .

தூரத்தில் நீ இருந்தாலும்,
இதோ உன் மாமனின் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

நண்பன் said...

வேதனை நிறம்பிய வரிகள்
என் செல்லக் குட்டிக்கு
அப்பாவுடன் சேர்ந்து மாமாவும்
வாழ்த்து தெரிவிக்கிறேன்
என்றும் நலமுடன் வாழ
எல்லாம் வல்ல நாயன்
அருள் புரியட்டும்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
குட்டிம்மா

யாதுமானவள் said...

முத்தமிழ் மொழியினில் கவிதை வார்த்துச் சேனை
அத்தனை உறவின்ஆழ் மனவாழ்த்தை ஹாசிம் பெற்ற
முத்தென ஒளிமிகும் பாத்திமா ஹியாவிற்கு நாங்கள்
மொத்தமாய்ச் சேர்த்து மகிழ்வுடன் அனுப்பு கின்றோம்

ஆழிசூழ் இலங்கை விட்டு அரபுமண் ணைசேர்ந் தபின்பு
ஏழிசை கீதம்கூட இனிக்க வில்லை உன்மழலை யின்றியென்
றேக்கம் கொண்டு நித்தமிங்கு வாடுகின்ற தந்தை துயரை
போக்கிட உந்தன்சிறு இதழ்குவித்து தந்திடோர் தூயமுத்தம் !

திங்களைப் போல செந்தண் மையும் கொண்டு
செங்கதிர் போல மிகச் சிறப்புகள் கண்டு
பெண்குலந் தன்னில் பெருஞ் சிறப்புடன் விளங்கி
மங்களம் பொருந்தி என்றும் மகிழ்வுடன் வாழ்ந்திடுக!

அறிவும் அன்பும் நல்லழகும் நீள்ஆயுளும்
பரிவும் செறிவும் நற்பண்பும் பைந்தமிழும்
உறவும் பொருளும் சிறுகுறைவற பெற்று
உயர்வாய் வாழந்திட உளமார்ந்து வாழ்த்துகிறேன் !

தூயகுலம் பெற்றெடுத்த தும்பை இதழ்ப் பூவனமே!
ஆயதொரு கவிஞனவன் ஆசைமிகு பெட்டகமே!
வாயார வாழ்த்துகிறேன் வளமான வாழ்க்கையினை
நான்காண்டு கடந்ததுபோல் நூறாண்டு வாழ்ந்திடவே!
அன்புடன்,
யாதுமானவள்

ஜிப்ரியா said...

அற்புதமான வரிகள் ஹாசிம்..பிரிவின் துயர் இந்த வரிகளில் கண்டேன்..உங்கள் குட்டி மகள் நீண்ட ஆயுளுடன் நலமாய் வாழ்ந்திட நானும் வாழ்த்துகிறேன்..

உமா said...

ஹாசிம் உங்கள் மகளா ....
எப்போது பிறந்த நாள் ....
இவ்வளவு அழகு கவிதைக்கு சொந்தக்காரிக்கு வாழ்த்துக்கள்....

நாம் இப்போது வெகு தொலைவில் இருந்தாலும், அவர்களின் எதிர்காலதுக்கு தானே நல்லது....
ஆதலால், வேதனை வேண்டாம்....அன்புடன், மகிழ்ச்சியுடன் வாழ்த்துவோம் நாம் செல்லத்தை.....

அப்புகுட்டி said...

உருக்கமான வரிகள் ஹாசிம்
செல்லக்குட்டிக்கு இனிய
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
என்றும் நலமுடன் வாழ
வாழ்த்துகிறேன்
பாசமுள்ள தந்தையின்
குமுறல்கள் கவலை வேண்டாம்
ஹாசிம் காலம் வரும்
அதில் விடிவு வரும்
காத்திருங்கள் வாழ்க வளமுடன்
அன்புடன்
அப்புகுட்டி.

மஞ்சுபாஷிணி said...

குடும்பத்தை பிரிந்து இப்படி பாடுபட்டு உழைத்து என்றோ ஒரு மாதம் கிடைக்கும் லீவுக்காக கனவுகளுடன் காத்திருந்து மகளை மனைவியை கண்டதும் இதுநாள்வரை பட்ட துன்பமெல்லாம் சடுதியில் மறைந்து உறவுகளோடு இன்புற்று நாட்களை கழித்து ஒரு மாதம் வேகமாக கரைந்து குழந்தை பிறந்தநாளுக்கு ஆசையுடன் காத்திருந்து காலையில் முத்தத்துடன் குழந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி பரிசுப்பொருள் கொடுத்து அதைப்பெற்ற ஆனந்தத்துடன் அப்பா மாலை என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் வருவாங்க என்று ஆசையுடன் சொல்லும் மகளை அணைத்து மாலை கொண்டாட்டத்துடன் பிறந்தநாளுக்கு எல்லோரையும் கூப்பிட்டு இதோ பிறந்தநாள் கொண்டாட்டம் கனவிலே கண்டு மகளை தொலைபேசியில் வாழ்த்தி ஆசிச்சொல்லி அப்பா வந்துருவேன் கண்ணு என்று சமாதானப்படுத்தி.......

ஹாசிம் உன் மனசுல இருந்த அன்பை எல்லாம் வரிகளில் கண்ணீரோடு சேர்ந்து கவிதை வரைந்துவிட்டாயேப்பா..... படிப்பவர் கண்களிலும் நீர் வரும்படி.... நெகிழ்ச்சியான கவிதைப்பா...... குழந்தைக்கு என் ஆசிகள்..... என்றும் சௌக்கியமுடன் இருக்கணும் குழந்தை.....

அருமையான தகப்பன் பாசத்தை இங்கே கவிதையில் கண்டு நெகிழ்கிறேன் மகிழ்கிறேன்பா...

உதயசுதா said...

haasim kaalaiyil ippadi oru kavithai ezuthi ennai kalanga vachchuttingale.
ungalin kavithaiyil theriyum paasaththai paarththu naan piramiththu ponen

செய்தாலி said...

குட்டிக் கவிதைக்கு என் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்
எல்லாம் வல்லா இறைவன் அவனின் கிருபையும், பரக்கத்தும், ரஹ்மத்தும் பெற்று
நீண்ட ஆயுளுடனும் உடல் ஆரோக்கியத்துடன் வாழ பிராத்திக்கிறேன்

கவிதைக்கு வார்த்தை இல்லை ஏன் என்றால்
உயிருள்ள வரிகளுக்கு நிகராகுவத்தில்லை கருத்து

m said...

http://visumbi.blogspot.com/2011/07/blog-post.html

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

http://thanjai-seenu.blogspot.com/2010/07/2.html

அன்பு செல்லத்திற்கு இந்தவருடமும் மாமனின் இனிய தாமதமான பிறந்தநாள் நல்வாழ்த்துகள்...

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...