இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Thursday, June 30, 2011

நண்பனே மறுமை காத்திருக்கிறது

நண்பனே உன்னாயுட்காலம் 
உன்னைவிட்டும் விரண்டோடுகிறது 
மண்ணறை உமக்காக 
எதிர்பார்த்திருக்கிறது 

மறுமையின் விளைநிலமான 
இவ்வுலகில் எவற்றை அறுவடைசெய்தாயோ 
அவற்றோடு மட்டும் உன் பயணம் 
ஆரம்பமாக இருக்கிறது 

தோழனே உனைப்படைத்த இறைவன் 
உனை விசாரிப்பதற்குமுன்
சுய விசாரணை செய்துகொள்
நாளை கைசேதப்பட நேரிடும் 


உன்னால் தொழப்படாத தொழுகை 
இறுதியில் உமக்காக தொழுவிக்கப்படும் 
பிறருக்கு வளங்கிடாது 
சேர்த்த செல்வங்களெல்லாம் 
உனை வழியனுப்பி வைத்துவிடும் 
நீ தனிமைப்படுத்தப்படுவாய் 

உலக ஆசையில் நீ 
மறந்திருந்த மறுமையும் 
அறிந்திருந்தும் செய்துவிட்ட 
பாவங்களும் 
சேர்ந்துமக்கு எதிரியாயாகுமே 

அன்பனே சிந்தித்துக்கொள் 
அவற்றை சீர்செய்துகொள் 
இங்குபோல் சுவர்க்கத்திலும் 
நண்பர்களாக உலவுவோம் 

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

2 comments:

vidivelli said...

nalaayirukku..
unmaithan chako

புலவர் சா இராமாநுசம் said...

இம்மை மறுமை என்பது வெறுமை
செம்மை வாழ்வே என்றும் அருமை
தம்மை மறந்தும் தவறுகள் வேண்டாம்
தன்நல மின்றி வாழ்வேம் ஈண்டாம்

நல்ல பாடலை நல்கினீர் நண்ப
நற்றமிழ் வளர்க்கும் உயரிய பண்ப
சொல்லில் பொருளும் சுவையும் கூட்டி
சொன்னீர் இங்கே கவிதையும் தீட்டி

புலவர் சா இராமாநுசம்

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...