இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Monday, June 27, 2011

சினிமாவிலேன் மோகம்.....

சினிமாவெனும் சித்திரம் 
சிந்திக்க வழி செய்கிறதா 
சீரழித்து சிதைக்கின்றதா - என 
சினங்கொள்ளச்செய்கிறதே....


கலாச்சார மாசுபடுத்தல்களோடு 
கலங்கச்செய்யும் பல்லாயிரம் நிகழ்வுகள் 
சாதாரணமாய் அரங்கேறுகின்றது 
பொறுத்திடவும் முடிவதில்லை 
சரித்திரங்களும் மாறவில்லை 


தான் பெற்ற மகளை 
காமப்பேய்களுக்குப் பலிகொடுத்து 
சினிமாவில் சம்பாதித்திட அதன் 
மோகமேன் கண்ணை மறைத்திருக்கிறது சினிமாவென்றலைந்து 
சீரழிக்கப்பட்டு வேசிகளாகி 
சமூகத்தையும் சீரழித்திட 
கங்கணங்கட்டியலைகிறார்களே 


உண்மைத்திறமையுடன் 
உயர்ந்து நிற்பவர்களையும் வெட்கித்து 
தலைகுனிந்திடச்செய்கின்றது 
தற்கால சம்பவங்கள் 


பணந்தான் வாழ்வென்றால் 
இவ்வ(ழி)லிகளற்ற பணத்தேடலில் 
மானத்திற்கு விலைபேசாது 
பண்பாட்டிற்கு பலம் சேர்த்திடுங்கள் 

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

3 comments:

கவி அழகன் said...

வாசிக்க வாசிக்க இனிமை

புலவர் சா இராமாநுசம் said...

தேடிப் போய் பார்த்தது பெரியதிரை-நம்மை
வீடுதேடி வருகிறது சின்னத்திரை
பண்பெனப் படுவது பாடறிந்து ஒழுகுவது- அன்று
பண்பெனப் படுவது பார்த்து அழிவது- இன்று
எங்கே இருக்கிறது? பண்பாடு, கலாச்சாரம்
அழிவதற்கு--?


புலவர் சா இராமாநுசம்

Anonymous said...

உருப்படாத தேசம்
இங்கு எல்லாமே வேஷம்

தெளிவான வரிகள் உங்களுடையது
அது தான் கவிதைக்கு அழகு

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...