இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Sunday, June 12, 2011

ஈழத்துப் பாலகன்

அன்னை கருவறையில் ஒலி்த்தது
அனியாயக்காரரின் அத்துமீறிய கொலைவெறி 
கருவறையிலும் வேதனையடைந்தேன் 
அன்னைவழி அவலங்களுடன் 


தினமும் கதறியழுவாள் 
தினமும் வெருண்டோடுவாள் 
என்ன நடக்கிறதென்றுபுரியாது 
என் மூச்சைக் கைபிடித்துக் காத்திருந்தேன் 


நான் பிறந்தபோது அம்மாவென்றழைக்கமறந்து 
ஐயோ என்றழுததென்மனம் 
சின்னாபின்னமாகிய உடல்களும் 
சிதறிக்கிடந்த இரத்தங்களுக்கும் நடுவில் 
என் உலகத்து ஜனனம் 


நான் பசியால் அழுதபோது 
பட்டிணியில் கிடந்த என்தாயின் 
மார்பில் தொங்கியும் 
வரமறுத்த பாலுக்காய் கதறிஅழுதேன் 


இத்தனை கொடுமைக்காரனா கடவுளென்று 
நித்தமும் கண்ட அவஸ்தையில் 
நொந்த மனதுடன் நையப்புடைத்த 
நாட்களதிகம் 


உலகம் திரும்பிப்பார்த்திடாத 
ஈழத்து மண்ணை 
எரியவைத்து சாம்பலாக்கி 
சுடுகாடாய் மாற்றிய போதும் 
தப்பியது என்னுயிரும் 


வெறிகொண்டது என்மனமும் 
வேதனைகள் மறக்கவில்லை 
சோதனைகள் வாழ்வாகி 
அங்குமிங்கும் அலைந்த நிலை 


கண்முன்னே கற்பிழந்த அக்காக்களும் 
என் முன்னே கட்டிவைத்து சுடப்பட்ட அண்ணாக்களும் 
கதறி அழுதபோது உயிர்மாய்த்திட 
உள்ளம்தான் நாடியது 


நாட்கள் நகர்கிறது 
வாழ்வில் விடியலைமாத்திரம் 
மனங்கள் தேடுகிறது 
வடுக்கள் மாறாதபோதும் 
மீண்டுமொரு அவலம் வேண்டாத மனங்கள் 


கடந்தகால அழிவின் எச்சங்கள் 
எதிர்காலத்திற்கு எடுத்துச்செல்ல 
வேண்டாமென்றுதான் மனம் இன்று துடிக்கிறது 
காரணம் அதை தாங்கும் இதயம் 
ஈழத்துக்கு இனியுமில்லை 


ஈழத்தைநோக்கி இரங்கும் இதயங்களே
நாங்கள் அகப்பட்டிருப்பது 
அன்னியனின் ஆட்சியில் 
அவனுக்கு பாடம் புகட்ட நினைத்து 
எங்களை அழித்திடாதீர்கள் 


உங்களின் நகர்வுகளில் 
எங்களை கேடயங்ளாக்கும் 
அரக்க குணமுடையவர்களென்பதை 
மனதில் கொள்ளுங்கள் 


ஈழம் என்றாலும் இலங்கை என்றாலும் 
எங்காவது உயிர்வாழ்ந்திட 
இனியாவது வழிசெய்யுங்கள் 
நாங்களும் உயிருள்ள சாதாரண மனிதர்கள் 

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

12 comments:

யாதவன் said...

வலிசுமக்கும் கவிதை

Ramani said...

அம்மா என அழாது
ஐயோ என அழுத முதல் குரல்
நிச்சயம் ஈழக் குழந்தைகளின்
குரலாகத்தான் இருக்கும்
இதுவரை யாரும் பயன்படுத்தாத
உவமை சொல்லாட்சி
நெஞ்சை உலுக்கிப்போகிறது உங்கள் பதிவு

அன்புடன் மலிக்கா said...

மனக்குமுறல் சொல்லமுடியா சோகத்தின் வெளிப்பாடு.
இந்நிலைவேண்டாம் இனியாருக்கும்..

Anonymous said...

நான் பசியால் அழுதபோது
பட்டிணியில் கிடந்த என்தாயின்
மார்பில் தொங்கியும்
வரமறுத்த பாலுக்காய் கதறிஅழுதேன்.... இந்த வரிகள் என்னை அதிகம் ஈர்த்தது.

உலக சினிமா ரசிகன் said...

எழுத்தாளர் சுஜாதா கதையை திருடி வெள்ளைக்காரர்கள் ஹாலிவுட் படமாக்கியிருக்கிறார்கள்.முழு விபரம் அறிய எனது வலைப்பக்கம் வாருங்கள்.

அரசன் said...

சில வரிகளில் நெஞ்சம் வலிக்கிறது ,,,
காயங்கள் நிறைந்த வலிகளை வார்த்தைக்குள் அடைக்க முயன்றுக்கிரிர் ..

உலக சினிமா ரசிகன் said...

எழுத்தாளர் சுஜாதாவின் கதையை திருடி ஹாலிவுட்காரன்கள் படமெடுத்து விட்டான்கள்.
மேலும் விபரம் அறியவும்....
இந்த மோசடியை வெளி உலகத்துக்கு தெரியப்படுத்தவும்.....
எனது வலைப்பக்கம் வாருங்கள்.ப்ளீஸ்...

♔ம.தி.சுதா♔ said...

ஃஃஃஃஃஉலகம் திரும்பிப்பார்த்திடாத
ஈழத்து மண்ணை
எரியவைத்து சாம்பலாக்கி
சுடுகாடாய் மாற்றிய போதும்
தப்பியது என்னுயிரும் ஃஃஃஃஃ

வாசிக்கவே வலிக்கிறது சகோதரம்..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
அகவை ஒன்று கடக்கும் மதியோடை (நன்றி உறவுகளே)

vidivelli said...

நான் பிறந்தபோது அம்மாவென்றழைக்கமறந்து
ஐயோ என்றழுததென்மனம்
சின்னாபின்னமாகிய உடல்களும்
சிதறிக்கிடந்த இரத்தங்களுக்கும் நடுவில்
என் உலகத்து ஜனனம்

very very nice...
supper poem..
congratulation"

can you come my said?

Anonymous said...

ஈழத்தைநோக்கி இரங்கும் இதயங்களே
நாங்கள் அகப்பட்டிருப்பது
அன்னியனின் ஆட்சியில்
அவனுக்கு பாடம் புகட்ட நினைத்து
எங்களை----
தம்பீ கண்ணில் சுரந்த நீரால் அடுதத்
வரிகளை படிக்க இயலவில்லை. போதும் நீங்கள்
பட்டது. எல்லாம் வல்லவன் இறைவன் என்றால்
உங்களை வாழவிடட்டும்

புலவர் சா இராமாநுசம்

செய்தாலி said...

வலைச்சரம் வாங்க
http://blogintamil.blogspot.com/2012/05/blog-post_27.html

Seeni said...

நண்பா!

வலிகள்!
கண்ணீர்கள்!சொன்ன விதம் நன்று!

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...