இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Sunday, June 26, 2011

என் பொற்காலம்......விடியலின் சூரியன் 
உலகுக்கு வளக்காகிறது 
என் நிதர்சன வாழ்க்கைக்கு 
உதயசூரியன் நீயாகிறாய் 

உன்னதமான காதலோடு 
உறவுக்குள் உள்வாங்கினாய் 
எதிர்பார்ப்புகளுக்கதிகமாக 
எல்லாமே உகந்தளித்தாய் 

உன்னன்பில் திளைத்துவிட்டேன் 
அதிமதுரமாய் உறைந்துவிட்டேன் 
உன்தோள்மீது சாயும் பொழுதுகளை மட்டும் 
என்பொற்காலமாய் உணர்கிறேன் 


துன்பங்களே கொடுத்திடாத சுகமானவன் நீ 
சுற்றமும் உற்றுநோக்கின்ற உயர்வானவன் நீ 
எனைத்தாங்கும் உன்மார்பில் 
என்னாளும் நிலைத்திடத் துடிக்கிறேன் 

என் பிறப்பின் அடைவு 
உன்மடிதானோ என்றுணர்கிறேன் 
என் இறப்பு வரை 
நான்கொண்ட இச்சுகம் 
தொடர்ந்திடாதோ என்று ஏங்குகிறேன் 

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

4 comments:

மஞ்சுபாஷிணி said...

நேசத்துக்குரியவனின் மனதில் வாழ்ந்து மடியில் உறங்கி இறுதி மூச்சை அவனுக்காகவே அர்ப்பணிக்கும் சிரத்தையில் கவிதை வரிகளில் உள்ள அன்பும் காதலும் எத்தனை உறுதி என்று மிக அருமையாக படைத்திருப்பது சிறப்பு ஹாசிம்...

அன்பு வாழ்த்துகள்பா...

புலவர் சா இராமாநுசம் said...

உன்தோள்மீது சாயும் பொழுதுகளை மட்டும்
என்பொற்காலமாய் உணர்கிறேன்

பிரிவிடை ஆற்றா நிலைக்கு இவ் வரிகள்
நல்ல எடுத்துக்காட்டு
பாராட்டுக்கள்
புலவர் சா இராமாநுசம்

Jotheshree said...

annna super

ji...kolanji said...

மிகவும் அழகான கவிதை..

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...