இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Wednesday, August 31, 2011

அர்த்தமற்ற அதேநாள்......நோன்பிற்கு மகுடம் சூட்டிட
மகிழும் தினமாக மலர்ந்த பெருநாளில்
மனதின் போராட்டத்திற்கு
விடைகள்தான் கிடைக்கவில்லை 

விதியின் வரைவில் 
தேடல்களின் தொடர்களோடு 
துறவறம் தீராத சுமைகளின்னும்  
கனமாய்க் கனக்கிறது 

உயிரான உறவுகளின் 
பிரிவின் வலிகளோடு 
துன்பம் தீராத நோய்களின்னும் 
மருந்துகளற்று எரிகிறது 

அருகாமை தொலைந்த 
தொலைத்தொடர்பு அழைப்புகளோடு 
உவகையின் தேடலின்னும் 
உருவமற்று விம்பமாகிறது

நிமிடங்களின் நகர்வுகளில் 
காத்திருப்பின் காதல்களோடு 
இன்பத்தின் தேடல்களின்னும் 
அடைந்திடாது திண்டாடுகிறது 

நாற்புற சுவர்களின் நடுவில் 
சிறைப்பட்ட வாழ்வோடு 
மடிகணனியின் துணையின்னும் 
நிஜமாய்த் தெரிகிறது 

மனம் வருடும் மழலையின் 
கொஞ்சும் ஏக்கவரிகளோடு 
சொக்கித் தவிப்பதின்னும் 
சுடராய் ஒளிர்கிறது 

ஆளும் காதலில்
அங்கலாய்க்கும் உணர்வுகளோடு 
துணையின் துடிப்புகளின்னும் 
இடியாய் விழுகிறது 

உறவுகளிருந்தும் 
தனிமையின் தத்தளிப்போடு 
மனதின் வருத்தங்களின்னும் 
மங்கலமாய்த் திகழ்கிறது 

இத்தனை விடைகளிருந்தும் 
தெளிவில்லாத வினவல்களோடு 
பெருநாளாகினும் அர்த்தமற்று
அதேநாளாய்க் கழிகிறது .

Sunday, August 28, 2011

மகிழ்ந்த மனம் மாலை சூடியது

என்தங்கையின் உலக ஜனனத்தில் 
இன்றய நாளுக்கு பெருமைசேர்வது கண்டு 
பூரிக்கும் உள்ளத்துடன் 
பூச்சொரிந்து புகளெளுதவா 
பாமாலை சூடி பாராட்டுவதா 
வாழ்த்தோலையில் வாசம் சேர்க்கவா - என 
திண்டாடும் நிமிடம் 
திகிலடைகிறேன் 

எதிலும் மிகைத்தவள் நீ 
உன்னை ஈன்றவர்களும் 
உனையடைந்தவரும் 
உன்னில் உதிர்ந்தனும் 
உன்னில் மகிழ்ந்தவர்களுமென 
உறவுகளோடு ஐக்கியமானவள் நீ 
உன்னறிவோடு தீட்டும் முனைகளால் 
திகைத்த தருணங்களில் 
உன்பெருமை கூறியிருக்கிறேன்
 

Thursday, August 18, 2011

அவளாகிய அவள்... (தொடர்கவிதை 04 )


கண்ணடைத்து இருண்டிருக்க 
கட்டிலில் கிடந்த உணர்வு 
முடியாமல் கண் திற்நத போது 
வதனம் நோக்கிய ஒர் வட்டம் கண்டு 
அதிர்ந்ததை மறக்கவில்லை 

என் பார்வையில் கேள்வியறிந்த தோழி 
சாந்தி பெறு குணமாகிடுவாயென்ற சைகையில் 
என்காலின் வலியுணர்ந்து 
கண்ணீர்விட்ட அந்த நாளை மறக்கவில்லை 

எதிர்பார்த்திருந்த காகிதம் 
காத்திருக்கிறதென்றறிந்து 
கால்கள் விரைந்தபோது 
நிஜங்களும் நிழலாகியதென்றறிந்து 
எனைத் தேற்றியதை மறக்கவில்லை 

Wednesday, August 17, 2011

புறப்படு தோழா..... புறப்படுதோழா இன்னுமா உறக்கம் உனக்கு
எப்போது விழிக்கப்போகிறாய்
உன் நிம்மதி குலைப்பதற்காய்
சேனைப்படைகளங்கு சேவைசெய்கிறது


எத்தவறும்செய்யாத தேனீக்களாய்
எம்சமூகத்தோடிருந்த வாழ்வை
மூடன் கல் கொண்டு கலைத்ததுபோல்
ஆங்காங்கே அனியாயம் எம் கண்மணிகளுக்கு


உதிரம் கொதிக்கிறது உள்ளம் அழுகிறது
அப்பாவி மாதர்களின் மார்பைக் குறிவைக்கிறார்களாம்
இன்னும் அச்சங்கொண்டடங்குவதா?? - புறப்படு
பொறுமைக்கொரு எல்லை வேண்டாமா??


அச்சங்கொண்டழும் அன்னயர் துயரமும்
அடிபட்டிறந்த தங்கையின் சோகமும்
தட்டிக்கேட்டதால் உயிர்நீத்த வீரனின் கவலையும் 
அன்னிய ஆட்சியில் அகப்பட்டதற்காய் - தடுத்து
எம்மை ஆட்சிசெய்கிறது - போதும் புறப்படு

Monday, August 15, 2011

அவளாகிய அவள்....(தொடர்கவிதை 03)

எதிர்பார்ப்புகளே அற்று
கடத்தியிருந்த தினங்களுக்குள்
என்பெயரிட்டொரு மடல்
எங்கிருந்தோ வந்ததென
என்கரம் கிட்டியதை மறக்கவில்லை

யாருமற்ற எனக்கு யாரெழுதிய மடலோ - என்ற
ஆவலும் ஆச்சரியமும் எனையாள
அமைதியாகப்பிரித்த மடலில்
அன்பே...
உனைக்கண்டு எனைமறந்தேன்-என்
உணர்வுகளுக்குள் நீ ஊர்ந்தாய்
உனையடய வேண்டுமென
என்னுள்ளம் துடிக்குதடி - என்று மட்டும்
இருந்த வரிகளை நம்பாத என்கண்கள்
யாரென்று தேடியதை மறக்கவில்லை

விபரங்களற்று வெற்றுக் காகிதமாயிருந்த
பகுதிகளுக்குள் என்கண்களுர்ந்தும்
ஏமாற்றம் எனைக்கொல்ல
ஏக்கம் எனையாண்ட
அந்த நிமிடங்களை மறக்கவில்லை

மொட்டைக் காகிதமா - அல்லது
வீணனின் காகிதமாவென
தூக்கமும் வரமறுத்து
என்னுளேனிந்த மாற்றமோ
எனவியந்து நாட்களோடு நானும்
காத்திருந்ததை மறக்கவில்லை

என்நிலை கண்ட தோழி
உனக்குள் காதலோ 
அதற்குரியவன் யாரெடி
கனவென்ன கண்டாயடி - என்று
கிண்டசெய்தபோதே அழைக்கப்பட்டு
நான் ஓடிய வேகம் மறக்கவில்லை


எதற்காக ஓடினாள்...............???

அவளாகிய அவள்........(தொடர்கவிதை 02)
அவளாகிய அவள்... (தொடர்கவிதை 04 )

Sunday, August 14, 2011

நிதானித்து விடையளி.....செய்த்தான் என்ற தீய சக்தி -  இறைவனின்
படைப்புகளுள் வெறுக்கப்பட்டவன்
மனிதருள் அவனின் ஊடுருவலை - யாராலும்
தடுத்திட முடிவதில்லை


அன்றாடம் அவன் கடமை
மேதையானாலும் வழிகெடுத்திட
போதையோடலைகிறான்
சண்டைகள் மூட்டிவிட்டு
சந்தோசமடைகிறான்


மனங்களுக்கு இச்சையூட்டி
மதிகளை இவன்வென்று
தவறுகளுக்குள் நிலைத்திடச்செய்து
தங்க மனிதனையும் ஆழ்கிறான்

Saturday, August 13, 2011

அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு)அமைதி வேண்டும் நாட்டில்
நிம்மதி வேண்டும் எங்களுக்கென்று
உரைக்காத உயிர்களில்லை
உருகாத மனங்களில்லை
இச்சிறு நாட்டினிலே....

இனவெறியின் உச்சத்தில்
அன்று வைத்த தீயில் கருகிவிட்ட
உயிர்களின் சுவாலையில்
முப்பது வருடமெரிந்த நாடு
இன்னும் சுடுகாடாகிக் கிடக்கிறது 

உன்னாடு என்னாடென்று 
உயிர்குடித்த எம்நாடு 
உலகுக்கெடுத்துக்காட்டாய் 
இன்றும் உயிர்பெறத்துடிக்கிறது 

Thursday, August 11, 2011

வளைகுடாவிலிருந்து வழியும் கண்ணீர்


கண்டிராத முகமொன்றின்
மறைவொன்றை
கொண்டிருந்த நட்பினால்
அழுதிருந்தன மனங்கள்


புதல்வியின் வரிகளால்
பிரசவித்த பிரகாசமது
மிளிர்வதற்குள் மறைந்ததாய் செய்தி
இன்னும் ஒளிர்கிறது சேனையில் - உம்
திருமகளின் நாமத்தோடு


தமிழுக்குத் தொண்டு செய்திட
தமிழன்னையினை ஈன்ற தந்தை
தமிழார்வம் ஓங்கிடவே
தமிழ்ப்பால் ஊட்டிவிட்டீர்

Friday, August 5, 2011

விழிக்க மறுக்கும் உலகம்


மனிதனாய் பிறந்து 
பசியால் மரணமென்று 
ஒரு தேசமங்கு பரிதவிக்கிறதே..
ஏனிந்த உலகம் உறங்கிக் கிடக்கிறது 


அருகதையற்ற அரசனாய் 
ஆட்சிசெய்து கொள்ளையடித்து 
சேர்த்துவைத்த செல்வமுனை 
விரட்டலிருந்து காப்பாற்றவில்லை 


போராட்டங்கள் போர்க்களமாகி 
எரிகுண்டுகளுக்கு இரையானபோது 
சொத்துகளும் சேதங்களும் 
சோகங்களை தணித்திடவில்லை 

Tuesday, August 2, 2011

ஈழம் எப்படி உருவாகும் ??

ஈழத்தமிழனாய் 
அபயந்தேடி அலைந்து 
அசிங்கப்படும் அபலம் 
இன்னும் அரங்கேறுகிறது 

விடிவுக்கான தீர்வென்று 
உரைத்த மொழிகளெல்லாம் 
கானல் நீராகி 
சூட்டோடு மறைந்துவிட்டது 

ஈழத்தில் பிறந்ததற்காய் 
அனாதைக்கும் வாழ்வில்லை 
அபலைக்கும் வாழ்வில்லை 
அகதிக்கும் வாழ்வில்லை 
ஏனிந்த அஸ்தமனமோ.......?

Related Posts Plugin for WordPress, Blogger...