இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Tuesday, August 2, 2011

ஈழம் எப்படி உருவாகும் ??

ஈழத்தமிழனாய் 
அபயந்தேடி அலைந்து 
அசிங்கப்படும் அபலம் 
இன்னும் அரங்கேறுகிறது 

விடிவுக்கான தீர்வென்று 
உரைத்த மொழிகளெல்லாம் 
கானல் நீராகி 
சூட்டோடு மறைந்துவிட்டது 

ஈழத்தில் பிறந்ததற்காய் 
அனாதைக்கும் வாழ்வில்லை 
அபலைக்கும் வாழ்வில்லை 
அகதிக்கும் வாழ்வில்லை 
ஏனிந்த அஸ்தமனமோ.......?அழுத மனங்களெல்லாம் 
அழுது கொண்டிருக்கிறது 
வெந்த மனங்களெல்லாம் 
வெம்பிக் கொண்டிருக்கிறது 

உரக்கக் குரல் கொடுப்போரும் 
உரைத்த வண்ணமிருக்கின்றனர் 
உணரப்படாத வேதனைகள் - பாவம் 
(ஈழத்து) ஏழைகளோடு மட்டும் 

ஆங்காங்கே ஈழத்தமிழன் 
சிறை பிடிக்கப்படுகிறான் 
விசாரிக்கப்படும் போது 
நாடுவிட்டு நாடு அபயம்தேடல் என்கிறான் 

எந்த நாட்டிற்குச்சொன்றாலும் 
அகதிநிலை மாறுவதில்லை 
நீங்கள் திரும்பாத ஈழம் 
உங்களுக்காகக் காத்திருக்கிறது 
நீங்களே மீளாத ஈழம் 
எப்படி அங்கு உருவாகும்?????

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...