அமைதி வேண்டும் நாட்டில்
நிம்மதி வேண்டும் எங்களுக்கென்று
உரைக்காத உயிர்களில்லை
உருகாத மனங்களில்லை
இச்சிறு நாட்டினிலே....
இனவெறியின் உச்சத்தில்
அன்று வைத்த தீயில் கருகிவிட்ட
உயிர்களின் சுவாலையில்
முப்பது வருடமெரிந்த நாடு
இன்னும் சுடுகாடாகிக் கிடக்கிறது
உன்னாடு என்னாடென்று
உயிர்குடித்த எம்நாடு
உலகுக்கெடுத்துக்காட்டாய்
இன்றும் உயிர்பெறத்துடிக்கிறது
அழித்ததற்குப் பரிகாரமாய்-கொடை
அளித்திட சக்தியற்றநாடாய்
ஆசுவாசப்படும் அருந்நாடாய்
அகம் மகிழ்ந்திட வழிதேடி
யாசகம் கேட்கிறது......
மாறிய நிலைகள் மாற்றதபோது
சீரியதலைமை கிட்டாது நெகிழ்ந்து
மாற்ற நினைப்பதற்குள் - மீண்டும்
அழிவை ஆறப்பரிமாறுகிறார்கள்
அங்கலாய்ப்பில் அழுகிறது நாடு
தானீன்ற குழந்தைகள் தனக்குத்தானே
தீயிடக்கண்டு தாரைவார்க்கும்
கண்ணீருடன் தேம்பிஅழுகிறது
எதிர்வு கூறப்படுகின்ற
அனர்த்தங்களைக் கண்டு
சிதைக்கப்பட்ட சேதங்களைத்தாங்கி
சிறைபிடிக்கப்பட்ட நாடாய்
மூச்சுவிடத் துடிக்கிறது
மூழ்கடித்துச் சாவடித்திடாதீர்கள்
1 comments:
உன்னாடு என்னாடென்று ..........
இது தானப்பா பிரச்சினை.எல்லோரும் நம் நாடென்று சொல்லியிருந்தால் இன்று இலங்கை எவ்வளவு முன்னேறியிருக்கும்
Post a Comment