நோன்பிற்கு மகுடம் சூட்டிட
|
மகிழும் தினமாக மலர்ந்த பெருநாளில்
|
மனதின் போராட்டத்திற்கு
|
விடைகள்தான் கிடைக்கவில்லை
|
விதியின் வரைவில்
|
தேடல்களின் தொடர்களோடு
|
துறவறம் தீராத சுமைகளின்னும்
|
கனமாய்க் கனக்கிறது
|
உயிரான உறவுகளின்
|
பிரிவின் வலிகளோடு
|
துன்பம் தீராத நோய்களின்னும்
|
மருந்துகளற்று எரிகிறது
|
அருகாமை தொலைந்த
|
தொலைத்தொடர்பு அழைப்புகளோடு
|
உவகையின் தேடலின்னும்
|
உருவமற்று விம்பமாகிறது
|
நிமிடங்களின் நகர்வுகளில்
|
காத்திருப்பின் காதல்களோடு
|
இன்பத்தின் தேடல்களின்னும்
|
அடைந்திடாது திண்டாடுகிறது
|
நாற்புற சுவர்களின்
நடுவில்
|
சிறைப்பட்ட வாழ்வோடு
|
மடிகணனியின் துணையின்னும்
|
நிஜமாய்த் தெரிகிறது
|
மனம் வருடும் மழலையின்
|
கொஞ்சும் ஏக்கவரிகளோடு
|
சொக்கித் தவிப்பதின்னும்
|
சுடராய் ஒளிர்கிறது
|
ஆளும் காதலில்
|
அங்கலாய்க்கும் உணர்வுகளோடு
|
துணையின் துடிப்புகளின்னும்
|
இடியாய் விழுகிறது
|
உறவுகளிருந்தும்
|
தனிமையின் தத்தளிப்போடு
|
மனதின் வருத்தங்களின்னும்
|
மங்கலமாய்த் திகழ்கிறது
|
இத்தனை விடைகளிருந்தும்
|
தெளிவில்லாத வினவல்களோடு
|
பெருநாளாகினும் அர்த்தமற்று
|
அதேநாளாய்க் கழிகிறது .
|
5 comments:
ஏக்கங்கள் விரைவில் நிறைவேற வாழ்த்துக்கள்
//அருகாமை தொலைந்த
தொலைத்தொடர்பு அழைப்புகளோடு //
அதே அழகு உங்கள் கவிதையில் என்றென்றும் ஒளிர்கிறது ஹாசிம். எல்லாம் மாறும். இன்பம் கூடும். இறைவன் அருள் எல்லாருக்கும் கிட்ட ரமலான் நன்னாளில் வேண்டுவோம். வாழ்த்துகள் ஹாசிம்.
அன்புள்ள நண்பரே...
இதுவும் மாறும்... விரைவில் எல்லாம் இனிதாய் அமையட்டும்...
என் தாமதமான ஈகை பெருநாள் நல்வாழ்த்துகள்...
இத்தனை விடைகளிருந்தும்
தெளிவில்லாத வினவல்களோடு
பெருநாளாகினும் அர்த்தமற்று
அதேநாளாய்க் கழிகிறது..
இந்தப் புரிதலே வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கும் தன்மைகொண்டது.
அருமை.
வணக்கம் நண்பரே!பதிவுகள் அருமை.அவசியம் என் வலைதளத்துக்கு ஒரு முறை வருகை தாருங்கள்!
Post a Comment