கண்டிராத முகமொன்றின்
மறைவொன்றை
கொண்டிருந்த நட்பினால்
அழுதிருந்தன மனங்கள்
புதல்வியின் வரிகளால்
பிரசவித்த பிரகாசமது
மிளிர்வதற்குள் மறைந்ததாய் செய்தி
இன்னும் ஒளிர்கிறது சேனையில் - உம்
திருமகளின் நாமத்தோடு
தமிழுக்குத் தொண்டு செய்திட
தமிழன்னையினை ஈன்ற தந்தை
தமிழார்வம் ஓங்கிடவே
தமிழ்ப்பால் ஊட்டிவிட்டீர்
உலகறிந்த யாதுமானவளாய்
உலாவரும் நவீனத்து ஔவையால்
உம்நாமமும் உயிர்த்து
உள்ளங்களில் நிலை கொண்டது
லதாராணியும் புதல்வியின்
உள்ளம் யாசிக்கும்
உயர் குருவாம் நீர்
கேட்டதில் பூரிக்கிறது மனம்
சேனைத் தமிழ் உலாவும்
உம் மரணத்தோடொருமுறை ஸ்தம்பித்தது
காரணம் நட்பென்ற இதயங்களை
உள்வாங்கிக் கொண்டதால்
தேசங்கள் கடந்த
தேடல்கள் வாழ்வானதில்
உம் இறுதி அஞ்சலிக்காய்
மௌனங்கள் காணிக்கையானது
சேனைத் தமிழ் உலாவில்
நீர்வளர்த்த தமிழ்
உலாவருவருகிறது
அதனோடுள்ள மனங்களில்
உம் சாந்திக்கான பிரார்த்தனை
என்றும் சேர்ந்திருக்கிறது
சேனைத் தமிழ் உலா சார்பான இரங்கல் கவிதை
0 comments:
Post a Comment