இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Friday, January 30, 2015

மீண்டுமொரு அஷ்ரஃப் ??

மனித நேயத்தின் முகவரி நீ 
மரணித்தும் மனித மனங்களில் 
வாழும் உத்தமன் நீ 
நீ வாழ்ந்த காலமது 
வறியவனும் மகிழ்ந்த காலம் 

 பகலிரவாய் பாரபட்சமின்றி
பல்லின மக்களையும் 
உடன்பிறப்புக்களாய்க் கண்டு 
உயிர்தவிர ஈந்தளித்தாய் 

அக்காலத்து உள்ளங்களெல்லாம் 
அதிகமதிகம் உனை யாசித்திருந்தது 
உம் அசுர வேகத்தின் வெற்றிகளில் 
உருக்குலைந்தன பல உள்ளங்கள் 

ஏழைவிடுகளெல்லாம் 
செல்வமயமாய் மாறியகாலம் 
மாடிமுதல் குடிசைவரை 
மகிழ்ச்சி பொங்கும் வாழ்வு தந்தாய் 

உன் மறைவில் உருக்குலைந்தது 
இலங்கையில் எம் தேசம் 
இன்னுந்தான் பல உருவங்களாய்த் 
தவிக்கிறது எம் சமுகம் 

தசாப்தங்கள் கடந்தும் 
வீதகளில் விட்ட அனாதைகளாய் 
தட்டுத்தடுமாறித் தவிக்கிறது எம் இனம் 
தலைவர்கள் கூட்டம் தத்தம் தயவுகளில்தான் 
தாங்கிச் செல்கிறார்கள் நாளைக்காய் 

ஒன்றுபடுத்திய அஷ்ரஃப் 
வென்று காட்டிய அஷ்ரஃப்  
பாதை வகுத்த அஷ்ரஃப் 
தாணைத் தளபதி அஷ்ரஃப் 
சுவனத்திலல்லவா வாழ்கிறார் 


மீண்டுமொரு அஷ்ரஃப் 
மீளப்பிறந்திடுவாரா??
மீதமுள்ள எம் தேசத்தை 
மீளவும் ஒன்றுபடுத்திட
மீண்டு வருவாரா??

நன்றி  : இப்படத்தினை பதிவிட்டு யாரென்று தெரிகிறதா என்ற கேள்வி எழுப்பிய என்னுயிர் நண்பன் பிரதேசசபை உறுப்பினர் முனாஸ் அவர்களுக்கு மிக்க நன்றிகள்.

Thursday, January 22, 2015

மதிப்பற்ற உயிர்கள்......‘!!


உறையும் குளிரில் 
உள்ளமும் நடுநடுங்குகிறது 
உறவுகளின் உணவுகளுக்கு
உயிரும் இங்கு பிரிகிறது 

தேசமிது பாலைவனந்தான் 
பணத்தின் சோலைவனமானதில் 
அதிஉச்ச சூடும் அதிரும் குளிருமாய் 
அவதிகளால் அல்லலுமதிகம் 

முப்பது வயதானவருக்கு 
மூச்சு முட்டியதால் - இவ்
உலகவாழ்வை முடித்துக்கொண்டாராம் 
கேட்டதில் மூச்சே இறுகிப்போனது....

அச்சம் எதிர்காலத்திலாக்கி 
அதிக சிரத்தை நிகழ்காலத்தோடாகிறது
உணர மறுக்கும் உள்ளங்களால் 
உயிர்களுக்கும் மதிப்பற்றதாகிவிட்டது. 

Wednesday, January 21, 2015

விடிவு பிறக்குமா.....??


ஆட்சியென்பது ஓர்
அமானிதமென்பதை மறந்து 
ஆடிய ஆட்டமெல்லாம் 
அடங்கியே போய்விட்டது. 

தேசத்திற்கு உயிர்கொடுக்கிறோமென்று 
தேசத்தையையே கருவறுத்து 
வேசத்துடனான முகத்துடன் 
நாசத்தினைத்தான் செய்திருந்தனர். 

அப்பாவி உயிர்களை
அனியாயமாய்ப் போக்கி 
அரக்கனாய் அரண்மணையிலமர்ந்து 
அதி உச்சத் தாண்டவம் ஆடியிருந்தனர்.

காலத்தின் பதில் 
கட்டாயத்தின் மாற்றமாகியது 
இன்று நீர் கண்ணீர் விடக்கண்டு 
என் தேசமே மகிழ்கிறது 

அத்தனை ஆட்சியாளர்கக்கும் 
இதிலுண்டு அரியதொரு படிப்பினை 
சமூகம் ஈந்தளிக்கும் 
இன்றியமையாப் பொறுப்பு உங்களாட்சி. 

ஆளுவதும் வாழுவதும் 
சமூகத்துக்காகவே அல்லாது 
சுகபோகமாக்குபவர்களுக்கு 
சமூகப்பாடம் நிச்சயமுண்டு 

பல தசாப்தங்களாய்க் 
காத்திருக்கும் எம் சமுகத்திற்கு 
தலைவர்களானவர்களின் 
காத்திரமான சாதனைகளெங்கே??

காற்றுள்ள போது தூற்றுவார்களென
காத்திருந்து கழைத்துப்போன 
கண்ணியமான எம் சமுகத்திற்கு 
இனிமேலாவது விடிவு பிறக்குமா??

Saturday, January 17, 2015

சம்பியனானது - CEYLON STARS CRICKET CLUB - DOHA (நன்றி நவிலல்)

நேற்று வெள்ளிக்கிழமை (16/01/2015)  குளிர்காலக் கிண்ணம் என்ற தலைப்பில் 10 அணிகள் கொண்ட  11போர் 7 ஓவர்கள் அடங்கலாக நடாத்தப்பட்ட கடின பந்து (MRF) சுற்றுப்போட்டியில்  எங்களது (CEYLON STARS CRICKET CLUB)  அணி சம்பியனாக தெரிவானதில்  மிக்க மகிழ்ச்சியடைந்தோம். 

எனது தலைமையில் இடம்பெற்ற இந்த போட்டியில் ஆட்ட வீரர்களாக அட்டாளைச்சேனை சியாத் மற்றம் ஹிஸ்வான். பாலமுனையைச் சேர்ந்த றிஸ்மி,,மியாத்,பாயிஸ்,நஜீப்,றிபாய்.அக்மல்.நளீம்,றிபான், யாழ்பாணம் உசந்த வாழைச்சேனை றியாஸ் திருக்கோவில் பிரதீப் ஆகியோர் கலந்து கொண்டனர் 

துடுப்பாட்டத்தில் றிஸ்மி மிகவும் சிறப்பாக தனது திறமையை ஒரு அரைச்சதம் அடங்கலாக வெளிக்காட்டியிருந்தார் அத்துடன் சியாத் மியாத் றிபாய் மற்றும் ஏனையோரும் சிறப்புற தங்களது பங்களிப்பினைச்செய்தார்கள் அனைவருக்கும் எனது மிக்க நன்றிகள் 

பந்து வீச்சைப்பொறுத்தவரை மியாத் உசந்த மற்றும் அக்மல் சிறப்பாக தங்களது பங்களிப்பினைச்செய்து வெற்றிக்கு வகை செய்தனர் அதிலும் குறிப்பாக இறுதி ஆட்டத்தில் ஒரு ஓவரில் தொடர் நான்கு பந்துகளில் 4 விக்ட்டுக்களை வீழ்திய அக்மல் (மலிங்க விக்கட்) எதிரணியின் ஓட்ட எண்ணிக்கையில் மாற்றத்தினை ஏற்படுத்தினார் அவர்களுடன் றியாஸ் மற்றும்  றிபாய் அவர்களும் பந்து வீச்சில் கலந்து கொண்டார் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் 

களத்தடுப்பில் அனைவரும் சிறப்பாக செயல்பட்டதால்தான் இந்த வெற்றி சாத்தியமானது அனைவருக்கும் ஒவ்வொருத்தராக விசேசமாக நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் அத்தோடு பார்வையாளராக பாலமுனை மக்கீன் ஜலீல் அவர்கள் கலந்து கொண்டு ஊக்கப்படுத்தினார் அவருக்கும் மிக்க நன்றிகள் 

இச்சந்தர்ப்பத்தில் விடுமுறையில் இருக்கின்ற சகோதரர் றிசாத் அவர்களை அனைவரும் நினைவு கூர்ந்தனர் எங்களது அணியின் ஆரம்ப காலத்திலிருந்து சிறப்புற நடைமுறைப்படுத்தி வந்திருந்த றிசாத் இச்சந்தர்ப்பத்தில் இல்லாதது அனைவருக்கும் வருத்தத்தினைத் தந்திருந்தது அவருக்கும் பிரத்தியேகமான நன்றிகளையும் இந்தக் கேடயத்தினை அவருக்கே சமர்ப்பணமும் செய்கிறோம் 

இந்த சுற்றுப்போட்டியில் கேடயமும் பணப்பரிசில்களும் வளங்கி சிறப்பாக நடாத்தி முடித்த சகோதர்களுக்கும் மிகவும் பலம்வாய்ந்திருந்த கல்முனையை மையமாக கொண்ட எதிரணியினருக்கும் எங்களது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம் நன்றிகள் நன்றிகள் பொன்னெழுத்துக்களால் பொறிக்கபட வேண்டிய இந்த வெற்றியானது காலாகாலம் மகிழக்கூடிய ஒரு விடயம் ஆதலால் எனது தளத்தில் உள்வாங்கினேன். பார்வையாளர்களுக்கு ஏமாற்றமாகியிருந்தால் மன்னிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் 

Friday, January 2, 2015

என் சுடரொளி நீ

வளமான இரவுகள் 
வறுமையாய்க் கழிகிறது 
தனிமையின் வேதனைக்குத 
துணையாய் உன் நினைவுகள் 

கணப்பொழுதும் பிரிந்திடாக் 
கழிப்பில் மகிழ்ந்து - என் 
கற்பனைக்கும் எட்டிடா 
சுவர்க்கத்தினைக் காட்டினாய் 

தேயும் நிலவில் 
பௌர்ணமி நிகழ்வாய் 
கடந்திடும் நாட்களில் 
சில நாட்களின் தரிசனம் 

இவ்வுலகில் நான் கண்ட 
சுடரொளி நீ 
சுழலும் தினங்களை - உன் 
நினைவுகளால் மாத்திரம் 
சுகமாக்குகின்றேன்

நீயின்றிய இன்றய பொழுதுகளில் 
சிற்றின்பமும் கசப்பாகி 
அத்தனை இரவுகளும் 
தனிமையில் தளர்கிறேன்

வேண்டும் நீ என்னோடு 
வேதனைக்கெல்லாம் முற்றுப்புள்ளியாய் 
வேறு வழியின்றிக் காத்திருக்கிறேன் 
வரும் வரை விண்ணோடு

Related Posts Plugin for WordPress, Blogger...