சங்கமத்தின் விழைவுகளையும்
சரித்திரம் படைத்துவிட
ஆட்சியில் வென்றிடலாமே...
சாதாரணம் என்றிருந்து
அசாதாரணமாய் மாற்றுகின்ற
அரிய படிகளையும்
குறிவைத்து நகர்த்திவிடு...
மனமென்ற எமதுள்ளம்
மகிழ்ச்சி நிலை கண்டுவிட்டால்
தெளிந்த உணர்வுகளுடன்
தேறுகின்ற நிலைவருமே...
தோல்விகளோடு துவண்டிடாது
அதன் வழியில் தடங்கலகற்றி
முயற்சியோடு முன்னேறிட
வெற்றி வழி கண்டிடலாம்...
சரித்திரம் கண்டவெரெல்லாம்
எம்போண்ற சாமானியரே..
எம்கையில் உள்ளதோடும்
படைத்திடலாம் சரித்திரங்கள்...
புதுவருடத்தின் மலர்வோடு
புதுயுகம் கண்டிடவும்
புத்துணர்வு அடைந்தென்றும்
அனைவரும் வென்றிட வாழ்த்துகிறேன்...

1 comments:
என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் தோழரே...
Post a Comment