இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Saturday, January 15, 2011

தாயன்புக்கீடேது....


விந்தென்ற அற்பமுனை
கருவாகத் தன்வயிற்றில் சுமந்து
தற்கொலைக்கீடாக..
உயிர்கொடுத்த உத்தமியவள் - தாய்

சேயாய் உனையேந்தி...
பொத்திவைத்துக் காத்துவளர்த்து
அகிலத்தில் நடமாடிட
அன்போடு வழிநடாத்தினாள்...

உலகில் நீகண்ட
ஆதார அன்னையவள்
அவளன்புக்கீடேது வைகறையில்
தாயை வெறுத்த பிள்ளையுண்டு
பிள்ளையை வெறுத்த தாயுண்டா??

ஊதாரி மகனென்று தந்தையும்
உதவியற்ற உறவென்று சகோதரமும்
நோக்கிடா தந்தையென்று பிள்ளையும்
நலிவுற்ற துணையென்று மனைவியும்
விட்டகன்ற போதிலும்
நான் பெத்த செல்வமென்று
மார்தழுவும் உன்னதமுன்தாய்...

அவளன்பை அன்றாடம்
வென்றவர் கூட்டத்தில் நீசேர்ந்து
அவள்வழியில் சுவனமடைந்திடு
அன்னை நலங்காத்திடு தோழா....

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

1 comments:

தோழி பிரஷா said...

அன்னைக்கு அருமையான கவிமை அருமை...அருமை..

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...