இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Monday, January 24, 2011

வேண்டுமெமக்கொற்றுமை....

கடந்த எம் காலத்தில் 
கற்றது அதிகமென
இழந்ததை மீட்டிடவும் 
இழப்பவை தவிரந்திடவும் 
வேண்டுமெமக்கொற்றுமை


வட்டமிட்டு தருணம்பார்த்து 
கொத்திச்செல்லும் பருந்துகளாய் 
அரசியல் நாமத்தோடும் 
அதிகார வல்லமையோடும் 
அன்னியமாய் காண்பித்துனக்கு 
அனியாயம் செய்கின்றனர்....


ஒருமைப்பாடு வேண்டுமென
ஓயாது ஒலித்தபோதும் 
சமூக நலன் சிந்தியாத 
சரித்திர நாயகனாய் 
செய்வது சரியென்று 
முழக்கமுன் மொழிகளில் 


தனித்து நின்று களமிறங்கி 
தயவுதேடித் தடுமாறி 
தோல்விதேடி அலையுமுன் 
சிந்தனை செய் ஒன்றுபட்டிட 


தேவையுள்ளபோது 
தேறிடாத முயற்சியாய் 
கைசேதம் கண்டபின்னர் 
சேர்ந்தழுது என்னபயன் ??
ஒரு சமூகம் ஒரு கொடியென
ஒரு தாய் மக்களாய் 
இன்றய தேவை எமக்கொற்றுமை...

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

1 comments:

கவி அழகன் said...

தேசத்தின் வேதனை கவிதையாய்

Post a Comment





Related Posts Plugin for WordPress, Blogger...