புரியாத வலியுடன்
துடிக்கிறது தேகம்
புரியாத உணர்வுடன்
கண்ணீர் வடிக்கிறது கண்கள்
புரியாத நிகழ்வுகளுடன்
எரிகிறது அங்கங்கள்
புரியாத வேதனைகளுடன்
பிறந்தபோது அழுதிருந்த
தாயின் கடன்...
வளர்ந்தபோது அழுதிருந்த
தந்தையின் கடன்....
பிரிந்தபோது அழுதிருந்த
துணையின் கடன்.....
விட்டகன்றபோது அழுதிருந்த
சேயின் கடன்.....
அத்தனையும் தீர்ந்திடாத
பரிமாற்றத்தின் வலிகளாய்....
வாழ்வோடு பிணைந்திட்ட
துயர்களின் தொடர்களோடு......
2 comments:
நான் கூறுவதை தவறாக நினைக்க வேண்டாம் நண்பா தங்கள் தளத்தில் உள்ள டெம்ப்ளேட் திறக்க வெகு நேரம் எடுக்கிறது மாற்றிவிடவும் புதுப்பொலிவுடன் திரும்பி வரவும்.
Latest Tamil Movies review,Tamil cinema latest News in Tamil
www.cineikons.com
Post a Comment