இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Tuesday, January 11, 2011

வெள்ளப்பெருக்கு.......(காத்திடு இறைவா)தாகம்தீர்க்கும் தண்ணீராய்
தலைகழுவும் வெண்ணீராய் 
சாரல்மழையின் துளிகளாய் 
சாந்தம் உன்நிலைகளிலென்றும் 


காலாகாலம் கனமழையாய் 
உன் அவதாரங்கண்டு
பூமித்தாயவளும் ஏற்கமறுத்துவிட்டாள்
அவள் மனனிறைந்த வாரிசாகினாய்..


வெள்ளப்பெருக்கும் உன்னாலாகி
வேலை வெட்டிகள் தடங்கலாகி
ஊணுறக்கம் கலங்கிய உறவுகள்
தஞ்சம் தேடுகின்றனர்..


சீரழித்த செயற்கைனர்த்தத்தின் 
காயங்களின்னும் ஆறாத வடுக்களாய் 
அங்குமிங்கும் அலைமோதும் உயிர்களுக்கு 
இயற்கையுன்னாலும் அவதியாகிறதே.. 


உயிரழித்த உன்தயவும் 
உயிர்பறித்த நிலையாக மாறி 
(உனை)நேசங்கொண்டோரை
நேர்ந்திடச் செய்கிறாய்...


இறைவனின் ஆட்சியிது 
அவன் கையில் உன்னாட்சி 
உன்னாலழிவென்று தீர்த்தவனே
உனைக்கொண்டு வாழவைப்பான். 
இறைவா அனைவரையும் காத்திடு ... 

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

2 comments:

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

கவிதை மிக அருமை

யாதவன் said...

சீரழித்த செயற்கைனர்த்தத்தின்
காயங்களின்னும் ஆறாத வடுக்களாய்
அங்குமிங்கும் அலைமோதும் உயிர்களுக்கு
இயற்கையுன்னாலும் அவதியாகிறதே..

மனச ரொம்ப தொட்டிட்டு

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...