இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Monday, August 30, 2010

தூது செல்லாயோ...தன்னந்தனியே எனை
தவிக்க விட்டு
தனிமையுடன் என்னவன்
தத்தளிக்கிறான் கண்டீரா

உதிரம் முழுதும்
உணர்ச்சி பொங்கிட
உயிராய் காதலை அழித்து
உறக்கம் கலைத்தவன்

நான் இழுத்த சுவாசத்தை
நாதமாய் வெளிவிட்டவன்
நான் தூங்க மடியேந்தி
நாள் தோறும் தாலாட்டியவன்

பிரிவு எனும் துயர்தந்து
பித்துப்பிடித்த நிலைதந்து
பிஞ்சு மனதை கெஞ்சவைத்து
பிரிந்து வாழ்கிறான் எனை தூரமாக்கி

கண்ணாளன் என்
கதிரவனை காணும்வரை
கருமுகிலில் மூழ்கிய
கன்னியாகிறேன் கண்டீரா..

என்துயர் அறிந்த கிளியே
என்னிலை தீர்த்திட
என்னவன் எனைச்சேர்ந்திட
எழுந்து நீயும் செல்லாயோ..

குறிப்பு: படம் கண்டதில் உதித்த வரிகள்

Saturday, August 28, 2010

இதுவும் காதலாம்...
கண்ணியம் பேசும் காதலுலகில்
கண்ணெதிரே பல காதல் ஜாலங்கள்
கண்கொள்ளாக் காட்சியாய்
கண்ணியமற்ற நிகழ்வுகள்

கட்டி அணைத்து கைகோர்த்து
கவிழ்ந்து மடியில் முகம்புதைத்து
கண்ட இடங்களெல்லாம்
கரை புரள்வதும் காதலாம்

சிறுவர் பெரியார்
சிறந்தோர் சான்றோர்
சிந்திக்காது முன்னிலையில்
சிலிர்த்து முத்தமிடல் காதலாம்

தவறற்ற காமத்தை
தருணமற்று பரிமாறி
தடுமாறி வழிமாறி
தத்தளி்ப்பதும் காதலாம்

ஒருவருக்கொருவர் என்று மறந்து
ஒவ்வொருவாராய் முகர்ந்திட
ஒழுக்கமற்ற நடத்தையுடன்
ஒன்றொன்றாய் ஏமாற்றுதல் காதலாம்

ஆசையில் மூண்ட காதல்
ஆசையுடன் முடிந்திட
ஆதாரமும் இல்லாமல்
ஆலாபனை பாடுகிறர்

உண்மைக்காதலுடன்
உயிருள்ளவரை தொடராது
உமிழ்கின்றனர் பாதியில்
உலர்ந்து மனம் வேகின்றனர்..

Thursday, August 26, 2010

விபச்சாரியின் குமுறல்...

விதியின் வழியில்
விக்கித்த பெண்ணானேன்
விலை மதிப்பற்ற மானமிழந்து
விபச்சாரியானேன் எனைமறந்து

கன்னிப்பருவமதில் என்
கட்டழகில் மயங்கியவனால்
கனிவுடன் காதல் விதைத்து
கடுப்பகன்று விட்டிருந்தான்

ஆசைக்கு அடிபணிந்ததில்
ஆனேனே பாவியாய்
ஆதரவு தினம் நாடி
ஆக்கி விட்டேன் எனை இழந்து

நாசம் எனைச்சேர்ந்தது
நாள் தோறும் வசை வந்தது
நாற்பது கடந்து விட்டதால்
நான்னும் ஒரு சருகானேன்

சமூகத்தை நாறச்செய்து
சலித்திருக்கும் பொழுதுகளில்
சஞ்சலங்கள் நிறைந்திருந்த
சந்தர்ப்பங்களை வைகிறேன்

வழிதவறும் நேரங்களில்
வடு பற்றி உணர்ந்திருந்தால்
வகுத்தடையும் துயர்களை
வருமுன் காத்திடலாம்

விபச்சாரம் செய்ததில்
வினைகள் மட்டும் அடைந்து
விடையற்ற கேள்வியாய்
விதி நொந்தழுகிறேன்

Tuesday, August 24, 2010

இனி ஒரு பிறவி வேண்டாம்

மனிதனாய்ப் பிறந்த நான்
நல்ல மானிடனாய் வாழ
பெற்றோர் வாயிலாக
பல கல்வி பயின்றேன்

நல்ல உறவுகள் பேணி
நண்பர்கள் பல கண்டு
நாளும் பொழுதும்
நட்புகளில் திழைத்திருந்தேன்

அடைந்த செல்வங்களை
என்தேவை நிறுத்தி
மற்றோர் தேவைக்காய்
மனமுவந்தழித்தேன்

பாரில் சந்தோசமாய்
பண்பான மனைவியும்
பாசமான குழந்தையும்
என்னிரு கண்களாக அடைந்தேன்

வெற்றிகள் பல கண்டு
உறவுகள் பல ஜெயித்து
துக்கங்கள் துடைத்தெறிந்து
மனிதப்பிறவியாய்
அனைத்தும் கண்டேன்

இருக்கும் காலத்தில்
மறுமை வெற்றி நோக்கி
பயணிக்கும் எனக்கு
வேண்டாம் இனியொரு பிறவி


ஈகரை போட்டிக்கவிதைகளில் ஒன்று

Saturday, August 21, 2010

இணைய நேசம்..


இணையம் வகுத்துத்தந்த
இணைய நட்புகளுள்
இயல்பான பாசத்துடன்
இணைந்து விட்ட உறவுகள்

இணையம் வாயிலாக
இயற்றிய நேசங்கள்
இயங்க மறுத்து
இருள்வதும் இயல்பே

இங்கிதமாய் தொடர்ந்து
இன்னல்கள் பல செய்து
இவ்வளவுதான் நட்பென
இறுதியற்ற அறுதி யாகிறர்

தேசங்கள் கடந்து
தேகங்கள் கண்டிராத
தேறிய நட்புகள்
தேற்சியும் காண்கிறது

நேசம் நலிவுற
நேர்த்தியற்ற காதலுடன்
நேர்மை தவறி
நேசர்களை இளக்கிறர்

நித்தியமற்ற உலகில்
நிவர்த்திக்கும் நட்புகளுடன்
நிம்மதி அடைந்திட
நிகள்வுகளை அமைத்திடுதல்
நிலைத்த நட்பாகுமே...

Thursday, August 19, 2010

காதல் வலி..


காதல் சுகமென்று
காவியங்கள் பாடி நிற்க
காதல் வலி என்று
காகிதத்தில் கீறிச்சென்றாய்

காத்திருந்து கைபிடிக்க
காலமெல்லாம் ஏங்கிநின்று
காதல் பூங்காவனத்திற்கு
காவலனாய் நானிருக்க

காட்சிகள் பல அமைத்து
காதலை நாடகமாக்கி
காத்திரமான பாத்திரமாய்
காவிச்சென்றாய் எனைவிட்டு

காதோரம் பல கவிபடித்து
காதலை உச்சரித்து
காலிலும் விழச்செய்தாய்
காலி செய்து சென்றுவிட்டாய்

காதல் கலந்த இரத்த நாளங்களுடன்
காதல் வாசத்தை மறக்க நாடி
காதல் உலகத்தை எதிரியாக்கி
காதலை மட்டும் ரசிக்கச்செய்தாய்

Wednesday, August 18, 2010

அடங்கிவாழும் பெண்இனம் ஆர்ப்பரிக்கும் ஆண்குணம்


ஆணால் ஆணைப்பெற்ற
பெண்ணானவள்
அற்புதப்படைப்பின்
அகிலம் வெண்றவள்

இன்பத்தின் உறைவிடம்
பாசத்தின் விழைநிலம்
பெண ஈர்ப்புவிசை
விதிகளின் இறுதிநிலை

ஆணையே ஏந்தும் அகிலமிவள்
பெண் இன்றிய உலகமும்
பெண் அற்ற உறவும்
வறண்ட நிலத்தில் விதைப்பதுபோல்

எல்லாமே பெண்ணாக இருந்தும்
அவள் கொண்ட அருங் குணத்தில்
ஆணுக்கு வழிவிட்டு
பின்னே இவள் நடக்கிறாள்

மதிப்பிற்குரியவளை
மார்தட்டும் சிறந்தவளை
சம அந்தஸ்தேனும்
மறுக்கின்ற ஆண்குணம்

பெண் என்றால் பணிவிடைக்கும்
தன்தேவை நிறைவுக்கும்
தயங்காமல் தட்டிப்பணிக்கும்
தயவற்ற ஆண்குணங்கள் சில

பெண்குலம் போற்றவேனும்
பெண்மனம் குளிரச்செய்ய
ஆர்ப்பரிக்கும் குணம்தவிர்த்து
உன்னாலானமட்டும்
ஒவ்வாமை நாடாதிரு

ஈகரை போட்டிக்கவிதைகளில் ஒன்று

Sunday, August 15, 2010

மலர்ந்த சுதந்திரம் மலர்ந்திட...(இந்திய சுதந்திர தினத்திற்காக)
சுதந்திர இந்தியாவின்
சுந்தர தினம் இன்று
சுகங்கள் கண்டிட
சுற்றமும் வாழ்த்திட

அகிம்சை வழியில்
அயராது பாடுபட்டு
அதிகார வர்கத்திடம்
அதிசய அடைவுதினம்

பாரத இந்தியாவின்
பாசுகள் அகன்று
பாலகனாய் மாறிய
பால் பொங்குதினம்

இன்னாளை கொண்டாட
இந்திய மண்ணில்
இயற்றுகின்ற ஒப்பனைகள்
இடியாய் ஒலிக்கிறது எங்கும்

விஞ்ஞான உலகமும்
வியக்கும் அளவு
விளைவுகள் அழித்து
விண்தொட்ட பேரரசன்

வல்லரசனாய் மலர்ந்து
வயதும் பல கடந்து
வறிய நிலை மாற்றிட
வழிகள் பல அடைந்து

உள்ளுர் மக்களின்
உள்ளங்கள் சிறந்திட
உதவிகள் செய்து
உயர்த்திடல் நல்லதே

அதிகார துஸ்பிரயோகம்
அரசியல் அனியாயம்
அரக்க குணங்கள்
அவதி வாழ்வு அத்தனையும் போக்கி

மலர்ந்த இன்நாளுக்கு
மகுடம் சூட்டிட
மனிதத் தன்மையுடன்
மலர்தலும் சுதந்திரமே..

அனைத்து நண்பர்களுகளுக்கும் எனது சுதந்திர தின நல்வாழ்த்துகள்

Saturday, August 14, 2010

தமிழுக்கு அமுதென்று பெயர்...

எம்மொழியும் கண்டிராத
செம்மொழியாம் தமிழ்
இன்னிசைக்கு இசைபாடும்
இன்பமயம் இன்பத்தமிழ்
எழுத்தொலியும் கருத்தொலியும்
கற்றுத்தரும் கருந்தமிழ்
கவிஞர்களின் வாழ்வுக்கு
கைகொடுக்கும் கலைத்தமிழ்
பாக்களுக்குப் பாவெடுக்கும்
பஞ்சாமிர்தம் பார்த்தமிழ்
பாமகனைப் பார்போற்ற
பல்லவியும் பைந்தமிழ்
மழலையின் தூக்கமும்
மணாளனின் மாலையும்
மரண அமங்கலமும் - என
மஞ்சம் சேர்க்கும் தமிழ்
தமிழ்த்தித்திப்பும் தவிப்பும்
தரணியில் காணாத வியப்பும்
தங்கத்தமிழுக்கு உண்டான திகைப்பும்
கண்டதனால் தமிழுக்கு அமுதென்பர்

Tuesday, August 10, 2010

பிரியாத வரமொன்று வேண்டும்...

உயிரானவளே என்
உறவானவளே
உன்னுள் என்னை
உருவாக்கியவளே

பஞ்சணையில் ததும்பி
பலரசம் கலந்து
பார் மறந்த
பாவையாக்கியவளே...

நான் திகைத்த அமுதம் நீ
நாவூறும் கனிரசமும் நீ
நாளுக்கு நாள் எனைமறந்து
நான் ரசிக்கும் உலகமும் நீ

உன் காதலில் திழைத்து
உலகை மறந்து லயித்த என்னால்
உனைப்பிரியும் வாழ்வு
உணர்வற்ற ஜடமாகுமே....

மடிகின்ற நொடியோ
மாறுகின்ற நிலையோ
குன்றும் வயதோ..
குழி பறிக்கும் விதியோ...

எம் பிணைப்பில்
ஏங்குகின்ற இவைகள்
எக்காலத்தும் பிரித்திடா
ஏற்றம் கொண்டு

வாழ்வோ சாவோ..
வாசமோ துறவோ.
இன்பமோ துன்பமோ
இணைபிரியா நிலைவேண்டும்

ஈகரைக் கவிதைப்போட்டிக்காக வரையப்பட்டது

Monday, August 9, 2010

என் இதயத்துடிப்பில்...என்பேனா முனையில்
எழுதித்தீர்க்காத வரிகளை
எங்கெல்லாமோ தேடினேன்
என் இதயம் துடித்தது பலமாக

உன்னால் பதிக்கப்பட்ட
உயிராகிய உணர்வுகள்
உள்ளத்தில் நிறைந்துவிட்டதால்
உமிழ மறுத்து துடித்ததுவோ..

இதயத்தில் புகுந்த உன்னை
இறுதி நாள் வரை
இதமாக ஏற்றியதால்
இன்புற்றதில் துடித்ததுவோ..

முழுமையாக ஆக்கிரமித்து
முதிர்வு நிலை கண்ட பின்னும்
முன்னேறும் உனைநினைத்து
முத்தானவளே என துடித்ததுவோ

எப்பொழுதும் துடிப்பதுபோல்
என்னுயிரான உனக்காக
எழுந்தவாறாக துடிக்கிறதே..
என்னிதையம் உயிர்க்கிறது அதனால்.

Saturday, August 7, 2010

ஈழம் என்று மலரும்..

சொற்ப வாழ்வில்
சோகங்கள் சுமைகளாக
வேண்டும் தேவைகள்
நிறைவடையா ஆசைகளாக

நிறைந்த வாழ்வு
நிம்மதியாய் வாழ
வேண்டும் ஈழம் என்றே உரைக்க
இருந்ததையும் இழந்த பரிதாப நிலை

சொந்த மண் மறுத்த ஜென்மங்கள்
சொரிந்த குண்டு மழையில்
இரத்த ஆறுகளில் தினமும் குளிக்க
சின்னா பின்னமான ஈழக்கனவு

வாழ்வைத்தேடி அலையும்
வறிய வாழ்க்கையுடன்
வயிற்றுள் சிசுக்களும்
மலருமா ஈழம் என்றுதான் கேட்கிறது

மலரும் மலருமென்று
உரக்கக்கூறி பிரிந்து நின்று
மலரச்செய்ய முடியாத ஈழம்
சேர்க்க வேண்டிய உணர்வுளோடு

ஒன்று பட்டால் உண்டு வாழ்வென
உலகமே பறைசாற்ற
தமிழ் ஒற்றுமையில் உலகையாழ
மலரா ஈழமும் மலரும் இனிதே.......

ஈகரை போட்டிக்காக எழுதிய கவிதை...

Thursday, August 5, 2010

இலங்கைத்தாய்....

என்னை ஈன்ற தாய்போல்
என்னை ஏந்திய தாய்
எச்சமின்றி அவள் மடியில்
என்வாழ்வு முடியுமட்டும்

பல்லினம் வாழ்ந்தாலும்
பகிஸ்கரிக்காத அன்னையவள்
பசுமையுடன் செழித்துவிட்ட
பல வளமும் நிறைந்தவள்

பேதங்களற்ற உறவுகளின்
பேராதரவு நாடுவதற்காய்
பேதலிக்கும் தாயவள்
பேறு கண்டும் திழைக்கிறாள்

திசைகள் பல கொண்டவள்
திடுக்கிடாது சென்றுவர
திகைப்புடன் வழிசெய்து
திருப்த்தியும் கண்டுவிட்டாள்

அடிகள் பல கண்டிருந்தாள்
அங்கலாய்ப்பும் அடைந்திருந்தாள்
அதிகாரம் உடையோரின்
அதிசயத்தால் வெண்றுவிட்டாள்

கடந்தவைகள் மறந்தாள்
கண்ணியமாய் விழித்திருந்து
கட்டுக்கோப்புடன் காத்துவிட
கறைகளற்ற நாட்களை தேடுகிறாள்

மறைந்து விட்ட சேய்களுடன்
மலர்ந்திருக்கும் குழைந்தைகளின்
மகிழ்ச்சிகளை கண்டிடவும்
மலரும் சிசுக்களை நோக்கிடவும்

மாதா என்றழைக்கும்
மாந்தர்களின் நலத்திற்காய்
மாத்திரம் காத்திடுவாள்
மாறுபாடு காட்டாதும் ஜெயித்திடுவாள்

சமுத்திரத்தின் நித்திலமிவளிடம்
சலனமற்ற பாசம் கொண்டு
சங்கமம் ஆகிவிட்டால்
சந்தோசம் கண்டிடடலாம்

இலங்கை என் தாயவள்
இவள் வீட்டில் சேயானேன்
இத்தனைவரிகளையும்
இன்புடன் சமர்ப்பிக்கிறேன்

Wednesday, August 4, 2010

பெண்ணுக்குள் பூகம்பம்.....

பெண் பிறந்ததால்
மனம் சோர்ந்த தாயுள்ளம்
பெண்ணை வளர்த்தெடுக்க
பெண்காப்பில் தாயுள்ளம்

பள்ளி சென்ற மகள்
பாதை மாறுமா எனும் தாயுள்ளம்
வேலை சென்ற மகள்
வீடு சேருமா எனும் தாயுள்ளம்

வளர்ந்துவிட்ட பெண்ணுக்கு
துணை தேடும் தாயுள்ளம்
கரை சேர்க்கும் வரை
ஏக்கத்துடன் தாயுள்ளம்

பந்தம் அடைந்த பெண்
சிறப்பாய் வாழுமோ என்ற தாயுள்ளம்
வாழும் பெண்ணுக்கு
குழந்தை கிட்டுமோ என்ற தாயுள்ளம்

அடைந்த கணவன்
நற்குணமுள்ளவனா என்ற தாயுள்ளம்
நன்றாய் வாழ்ந்து விட்டால்
சேர்ந்தே மரிப்பானா என்ற தாயுள்ளம்

அந்தம்முதல் ஆதிவரை
ஆரவார வாழ்கையுடன்
கேள்விகளே வாழ்வாகும்
பெண்மைக்குள் போராட்டம்

அடைவுகளை நோக்காகி
போராடித்துணிந்து
ஜெயிக்கும் பெண்மைக்கு
ஏது விதிவிலக்கு........

Tuesday, August 3, 2010

சிரிப்போடு கலந்து விடு.....மலர்ந்த சிரிப்பில்
மகிழ்கிறது மனம்
மதியின் போராட்டத்தில்
மலர்கிறது முகம்

புன்னகை தவழவிட்டு
புதுப் பொலிவும் படர
புத்துணர்வு பெற்றுவிட
புள்ளரிப்பு தேகமெங்கும்

என்னாளும் சந்தோசிக்க
எத்தணிக்கும் நேரமெல்லாம்
எதிர்பாரா சினம் வந்து
எகிரிடும் அத்தனையும்

கோபம் கொண்டுவிட
கோலமெல்லாம் மாறிவிடும்
கோரப்பார்வை வந்து
கோர்த்து விடும் வஞ்சனைகள்

நலிவுகள் மறந்திருக்க
நகைச்சுவையுடன் கலந்துவிடு
நன்றாக சிரித்துவிடு
நல்லதாய் மாறிவிடும்

சிரிப்போடு கலந்தவாழ்வின்
சிலிர்ப்பில் மகிழ்ச்சி பெற்று
சினமற்ற சூழலுடன்
சிறந்திடலாம் பாரினிலே..

தொலைதூரக் காதல்...

உன்னோடு இருந்த நிமிடங்கள்
உணர்த்தாத இன்பங்களையும்
உன் நினைவுகளோடு
உணரச்சொய்தாய் உன்பிரிவில்

வெகுதூரம் விட்டகண்று
வெற்று வாழ்வு வாழ்ந்தாலும்
வெகுவான உன்நிழல்கள்
சேர்ந்தேதான் தொடர்கிறது

ஒவ்வொரு நொடியும்
சகாப்தங்களாய் கடந்தாலும்
அவை உணர்வுகளுடன்
எம் காதல் தடங்களாய்

தொலைதூரம் சென்றாலும்
பிரிந்தும் பிரியாமலும்
சேர்ந்தும் சேராமலும்
உண்மைக்காதல் எம்மோடு..

Sunday, August 1, 2010

நண்பர்களே நலம்பெறுக...

பாலர் நாள் முதல்
பாவலனாய் ஆனவரை
பாசமான நண்பர்கள்
பாரினில் அடைந்து விட்டேன்

உறவுகள் பல கூடி
உதவிகள் அடையாவிடினும்
உளமாற நண்பர்கள்
உறுதுணையாயிருந்தனர்

எத்திசை அடைந்திடினும்
எழுதாத சரித்திரம் போல்
எப்பொழுதும் கூடவரும்
என் அன்பு நண்பர்கள்

பேதமற்ற உறவிது
பேராதரவு உள்ளது
பேரின்பம் கண்டிடவும்
பேராண்மை கொண்டது

இன்னாளை சிறப்பிக்க
இழந்த நட்பை அடைந்திடணும்
இனிதான நட்புகளை
இறுக்கமாக பற்றிடணும்

நட்பின் இலக்கணம் பாடும்
நன்நாள் இன்நாளில்
நண்பர்கள் கூட்டமும்
நலமுடன் வாழ வேண்டுகிறேன்
Related Posts Plugin for WordPress, Blogger...