இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Tuesday, August 3, 2010

சிரிப்போடு கலந்து விடு.....மலர்ந்த சிரிப்பில்
மகிழ்கிறது மனம்
மதியின் போராட்டத்தில்
மலர்கிறது முகம்

புன்னகை தவழவிட்டு
புதுப் பொலிவும் படர
புத்துணர்வு பெற்றுவிட
புள்ளரிப்பு தேகமெங்கும்

என்னாளும் சந்தோசிக்க
எத்தணிக்கும் நேரமெல்லாம்
எதிர்பாரா சினம் வந்து
எகிரிடும் அத்தனையும்

கோபம் கொண்டுவிட
கோலமெல்லாம் மாறிவிடும்
கோரப்பார்வை வந்து
கோர்த்து விடும் வஞ்சனைகள்

நலிவுகள் மறந்திருக்க
நகைச்சுவையுடன் கலந்துவிடு
நன்றாக சிரித்துவிடு
நல்லதாய் மாறிவிடும்

சிரிப்போடு கலந்தவாழ்வின்
சிலிர்ப்பில் மகிழ்ச்சி பெற்று
சினமற்ற சூழலுடன்
சிறந்திடலாம் பாரினிலே..

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

2 comments:

Riyas said...

கவிதை நல்லாயிருக்கு ஹாசிம்.. உங்க வலைப்பக்கம் திறக்க மிக நீண்ட நேரம் எடுக்கிறது.

நேசமுடன் ஹாசிம் said...

காரணம் புரியவில்லை நண்பா மிக்க நன்றி

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...