இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Monday, August 9, 2010

என் இதயத்துடிப்பில்...என்பேனா முனையில்
எழுதித்தீர்க்காத வரிகளை
எங்கெல்லாமோ தேடினேன்
என் இதயம் துடித்தது பலமாக

உன்னால் பதிக்கப்பட்ட
உயிராகிய உணர்வுகள்
உள்ளத்தில் நிறைந்துவிட்டதால்
உமிழ மறுத்து துடித்ததுவோ..

இதயத்தில் புகுந்த உன்னை
இறுதி நாள் வரை
இதமாக ஏற்றியதால்
இன்புற்றதில் துடித்ததுவோ..

முழுமையாக ஆக்கிரமித்து
முதிர்வு நிலை கண்ட பின்னும்
முன்னேறும் உனைநினைத்து
முத்தானவளே என துடித்ததுவோ

எப்பொழுதும் துடிப்பதுபோல்
என்னுயிரான உனக்காக
எழுந்தவாறாக துடிக்கிறதே..
என்னிதையம் உயிர்க்கிறது அதனால்.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

9 comments:

சசிகுமார் said...

கவிதை சூப்பர் உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

சசிகுமார் said...

ஹே வடை எனக்கு தான்

நேசமுடன் ஹாசிம் said...

நன்றி நண்பா கண்டிப்பாக உங்களுக்கில்லாமலா வடை

பிரஷா said...

கவிதை நல்லா இருக்கு....

நேசமுடன் ஹாசிம் said...

மிக்க நன்றி பிரஷா தங்களின் மேலான வருகைக்கும் கருத்துக்கும்

NESAMITHRAN said...

நல்லா இருக்கு

:)

நேசமுடன் ஹாசிம் said...

நன்றி நண்பரே...

யாதவன் said...

வாழ்த்துக்கள்

நேசமுடன் ஹாசிம் said...

நான்றி நண்பா

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...