இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Saturday, August 14, 2010

தமிழுக்கு அமுதென்று பெயர்...

எம்மொழியும் கண்டிராத
செம்மொழியாம் தமிழ்
இன்னிசைக்கு இசைபாடும்
இன்பமயம் இன்பத்தமிழ்
எழுத்தொலியும் கருத்தொலியும்
கற்றுத்தரும் கருந்தமிழ்
கவிஞர்களின் வாழ்வுக்கு
கைகொடுக்கும் கலைத்தமிழ்
பாக்களுக்குப் பாவெடுக்கும்
பஞ்சாமிர்தம் பார்த்தமிழ்
பாமகனைப் பார்போற்ற
பல்லவியும் பைந்தமிழ்
மழலையின் தூக்கமும்
மணாளனின் மாலையும்
மரண அமங்கலமும் - என
மஞ்சம் சேர்க்கும் தமிழ்
தமிழ்த்தித்திப்பும் தவிப்பும்
தரணியில் காணாத வியப்பும்
தங்கத்தமிழுக்கு உண்டான திகைப்பும்
கண்டதனால் தமிழுக்கு அமுதென்பர்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

2 comments:

Jotheshree said...

தமிழுக்கு மகுடம் சூடிய வரிகள் மிக்க அருமை....

abul bazar/அபுல் பசர் said...

தமிழுக்கு பூமாலையும்,புகழ் மாலையும் சூடி அழகுப் பார்த்திருக்கிறீர்கள்.
அழகு கவிதை.
வாழ்த்துக்கள்.

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...