இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Sunday, August 1, 2010

நண்பர்களே நலம்பெறுக...

பாலர் நாள் முதல்
பாவலனாய் ஆனவரை
பாசமான நண்பர்கள்
பாரினில் அடைந்து விட்டேன்

உறவுகள் பல கூடி
உதவிகள் அடையாவிடினும்
உளமாற நண்பர்கள்
உறுதுணையாயிருந்தனர்

எத்திசை அடைந்திடினும்
எழுதாத சரித்திரம் போல்
எப்பொழுதும் கூடவரும்
என் அன்பு நண்பர்கள்

பேதமற்ற உறவிது
பேராதரவு உள்ளது
பேரின்பம் கண்டிடவும்
பேராண்மை கொண்டது

இன்னாளை சிறப்பிக்க
இழந்த நட்பை அடைந்திடணும்
இனிதான நட்புகளை
இறுக்கமாக பற்றிடணும்

நட்பின் இலக்கணம் பாடும்
நன்நாள் இன்நாளில்
நண்பர்கள் கூட்டமும்
நலமுடன் வாழ வேண்டுகிறேன்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

2 comments:

சசிகுமார் said...

நண்பர்கள் தின நல் வாழ்த்துக்கள் ஹாசிம் உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

நேசமுடன் ஹாசிம் said...

மிக்க நன்றி நண்பா தங்களுக்கும் உரித்தாகட்டும் அத்தனையும்

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...