இத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு அளவுகடந்த நன்றிகள் என்னை ஊக்குவிக்க விரும்பினால் Follow ல் இணைந்து கொள்ளுங்கள்.... முடிந்தால் மேலான கருத்திடுங்கள் .... என்றும் உங்கள் நேசமுடன் ஹாசிம்.

Saturday, May 28, 2011

சொந்தமற்ற உயிர்.....

இறைவன் படைத்த உயிர் 
எமக்கெங்கே சொந்தமானது 
உலக பயணத்திற்கு 
பெற்றுவந்தோம் வாடகையில்

துன்பம் இன்பமென்று 
வாழ்வு சாவென்று 
ஏற்றத்தாழ்வுகளும் பல அடைந்து 
இன்னுந்தான் பயணம் தொடர்கிறதிங்கு 

எம் பாதையில் கிடைத்த 
செல்வமாய் பல உறவுகள்  
உயிருள்ளவரை  போற்றிட
உள்ளந்தான் துடிக்கிறது 

Tuesday, May 24, 2011

ஐபிஎல் என்றொரு சூதாட்டம்

கிரிக்கட் ஆட்ட உலகில் ஒரு சூதாட்டம்
ஐபிஎல் என்றொரு கோலாட்டம்
பணக்குவியல்களின் பரிமாற்றம்
பரபரப்புகள் நிறைந்ததொரு ஆட்டம்

தேசத்தின் பகுப்பிலொரு ஆட்டம்
புதியவர்களுக்கு வாய்பளிக்குமொரு ஆட்டம்
கிரிக்கட்டில் ஒரு திருப்புமுனை ஆட்டம்
அனைவரையும் ரசித்திடவைக்கிறதிந்தாட்டம்

ஆபாச நடனங்களில் கவர்ச்சி ஆட்டம்
இளைஞர்களை கவர்ந்திளுக்கிறதிந்தாட்டம்
ஆறுகள்(six) அதிகம் அடித்திடும் ஆட்டம்
ஆவலதிகம் தருகிறதிந்தாட்டம்

கல்வி கற்கின்றவரை கெடுக்கிறதிந்தாட்டம் 
தொழிலாளரை சோம்பேறியாக்கிறதிந்தாட்டம் 
மனங்களெல்லாம் ஏற்கிறதிந்தாட்டம் 
அநாவசியங்கள் நிறைந்திருப்பதும் இந்தாட்டமே

Saturday, May 21, 2011

எதுதான் அழகென்பது

பிறந்தவுடன் அழுகின்றகுழந்தை 
தாய்க்கென்றும் அழகுதான் 
வெற்றிகளடைந்து ஊர்போற்றும் குழந்தை 
தந்தைக்கென்றும் அழகுதான் 

பரிவோடுறவாடும் சகோதரன் 
உடன்பிறந்தவனுக்கழகுதான் 
பாசங்கலந்த பண்பான தோழன் 
நண்பனுக்கென்றுமழகுதான் 

உள்ளம் கவரந்து மகிழ்வித்த காதலன் 
காதலிக்கென்றும் அழகுதான் 
உறவில்திருப்தியளித்த கணவன் 
மனைவிக்கென்றுமழகுதான் 

Thursday, May 19, 2011

வற்றிடாத அன்பு


அன்பிற்கு நிகர் நீதானென்று 
அல்லும்பகலும் உனைத்தொடர்ந்திட
ஆவலளித்த பாசமுனது 
ஆசை தீர்த்திடாத அன்புனது 

வானங்கள் இடிந்தீடட்டும் 
மலைகள் மணல்களாகட்டும் 
கடல்கள் வரட்சி பெறட்டும் 
உனதன்பிற்கு ஈடிணையில்லை 

நானடைந்த நட்புகளையும் 
நானடைந்த காதலிகளையும் 
நானடைந்த உறவுகளையும் 
வென்றுவிட்ட அன்புனது 

Sunday, May 15, 2011

வீட்டுக்கு....வீடு


கடைக்குக் கடை
வேலையற்றோரின் வீணான
விளையாட்டுக்கள்

வீதிக்கு வீதி
நளைய மன்னர்களின் தேவையற்ற
வலம் வருகைகள்

வீட்டுக்கு வீடு
தொடர் நாடகங்களில் முழ்கி வேண்டாத
கவலைகளேற்று கண்ணீர் வடிகிறது

வாழ்நாளின் விரயங்கள்
பிரதிபலனற்றுக் கழிகிறது
வாழ்வில் திருப்தியில்லையென்று
கண்ணீரும் சிந்துகிறது

நாளையின் தேவையறிந்து
இன்றைய திட்டமிடலிலும்
இன்றைய பொழுதுகளை
நாளைக்காய் வழிப்படுத்தலிலும்
வளம்பெறுவது எதிர்காலமே...

குடும்ப அங்கங்களின் அரவணைப்புடன் 
அனாவசியமான அத்துமீறல்கள் களைந்து 
வீட்டுக்கு வீடு
வியூகங்கள் வகுக்கப்படுமானால் 
நாளை நம்கையிலாகுமே.....


Wednesday, May 11, 2011

அன்பே உறக்கம்கொடு....

கண்மணி உன் நினைவில்
கண்களேன் தூங்க மறுக்கிறது
காதலன் நான் இங்கிருக்க
கானகத்தில் நீ தனித்திருப்பதாலோ...

நீ எட்டிநின்று அருகில்வரமறுத்து
தொட்டுப்பார்த்து இட்டுவைத்த முத்தமும்
உன் கண்களெனைக் காணுமுன்
உன் கன்னம் கிள்ளிய நினைவுகளும்

ஊரயரும் வேளைவரை
உணர்வுகளைக் கட்டிவைத்து
உலகமே இருண்டிருக்க
நான் மட்டும் விழித்திருந்த நினைவுகளும்

Saturday, May 7, 2011

உம்வழி மாற்றுவீரா?

ஆணென்று நீமறந்து பெண்ணானவளை 
வெளிநாட்டு வேலைக்கனுப்விட்டு 
அவளனுப்பும் பணத்தில் வாகனமும் 
உம்சுகத்திற்காய் பெண்ணும்தேடுகிறாய் 

உம் பகட்டு வலம்வருகையில் மயங்கி
மதியிழந்த குமரிப்பெண்ணானவளும் 
நீதான் அவள்வாழ்கையென்று  
ஏமாந்த இன்னோர் பெண் 

விளக்கிக்கூறியும் புரிந்திடாத 
மகளைப்பெற்ற பெற்றோரும் 
மனமுடைந்து நொந்தழுது 
காலத்தை வைகிறார்கள் 

Thursday, May 5, 2011

விசமாகிறது பொறாமை.....

மாற்றானின் எழுச்சிகண்டு - உன்
மனதுக்கேன் படபடப்பு
நீ எட்டிடாத அடைவுகாணும்
அயலவன் மீதேன் கோபமுனக்கு

பொறுமை வேண்டும் உன்னுயர்வுக்கு 
பொறாமை கொண்டேன் சூழ்ச்சிசெய்கிறாய்
உன் பின்னடைவில் நீ கற்கமறந்து 
வெல்பவனை வீழ்த்தநினைக்கிறாய் 

Monday, May 2, 2011

நானும் ஓர் தீவிரவாதி

அநியாயம் கண்டு மனம்வருந்தி
தன் எழுத்துக்களால் எதிர்க்கின்றானே
அவனும் ஓர் தீவிரவாதிதான்


சாக்கடை அரசினை மாற்றி
சரித்திரம் படைத்திடப் பேசுகின்றானே
அவனும் ஓர் தீவிரவாதிதான்


உடன் பிறப்பினை உயிரோடு புதைத்து
உடமைகளின் அவதரிப்பினைத் தடுக்கின்றானே
அவனும் ஓர் தீவிரவாதிதான்

Sunday, May 1, 2011

போராடும் தொழிலாளர்

உதிரத்தினை உரங்களாக்கி 
வியர்வையில் தினமும் நனைந்து 
உடல்நலம் மறந்த 
உண்மையான உழைப்பாளி 


உண்ண மறந்திருந்து 
உறவும் பிரிந்திருந்து 
திருப்தியான ஊதியத்திற்காய் 
தினம்தினம் போராட்டம் 


நாட்டின் அபிவிருத்தியை 
சிந்திக்கும் அரசுகளும் 
ஆணிவேர் தொழிலாளரென்று மறந்து 
அவன் முன்னேற்றம் கருதாத 
ஆட்சியாளர் கூட்டங்கள் 





Related Posts Plugin for WordPress, Blogger...